Tiruchirappalli

News March 2, 2026

திருச்சி: துணை கலெக்டர்கள் இடமாற்றம்

image

தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம், திருச்சி வாணிப கழக சிறப்பு பறக்கும் படை துணை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கன்னியாகுமரி வாணிபக் கழக மண்டல மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 2, 2026

திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News March 2, 2026

திருச்சி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் / சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தி
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

சந்திர கிரகணம் – ஸ்ரீரங்கம் கோயில் நடை அடைப்பு

image

சந்திர கிரகணத்தையொட்டி நாளை மார்ச்.3-ம் தேதி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் 1 மணிக்கு மேல் மூலஸ்தானத்திலும், உப சன்னதிகளிலும் சேவையில்லை என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், சந்திர கிரகணத்தை ஒட்டி நம் பெருமாள் பிற்பகல் 3 மணிக்கு சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2026

திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே <<>>க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

image

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809), பொறியியல் பணிகள் காரணமாக வரும் மார்ச்.3, 5, 7, 10, 16, 21, 22 ஆகிய தேதிகளில், கரூர் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். எனவே பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 2, 2026

திருச்சி: கலைஞர் கனவு இல்லம் திட்டம் – கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் கடந்த 2024-25ம் நிதியாண்டில், திருச்சி மாவட்டத்திற்கு 4000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருச்சிக்கு கூடுதலாக 3000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் அலுவர்கள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 2, 2026

திருச்சி மாநகராட்சியில் ₹.7.3 கோடி மதிப்பில் மின் சேமிப்பு!

image

திருச்சி மாநகரில், மாநகராட்சிக்கு சொந்தமான 206 கட்டிடங்களில் சோலார் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல பஞ்சப்பூர் பகுதியில் தரை சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஏப்ரல் 2021 முதல் அக்டோபர் 2025 வரை மொத்தம் 1.5 கோடி மின்சார யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மின்வாரிய கட்டணத்தில் ₹.7.3 கோடி வரை சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 2, 2026

திருச்சி: கவுன்சிலர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை

image

மண்ணச்சநல்லூரை சேர்ந்த தம்பதியினர் சந்திரசேகரன், கிருத்திகா. பேருராட்சி கவுன்சிலராக இருந்த சந்திரசேகரன் கடந்த சில மாதங்களுக்கு முன் காலமானார். இந்நில்லையில், சென்னையில் பணி புரியும் மகள்களை காண கிருத்தியாக சென்றுள்ளார். பின்னர், நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 3.5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 2, 2026

திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டம் பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் தங்நகர் துணைமின் நிலையங்களில் இன்று(மார்.2) அரைகால மின் பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பெரிய கல்லாங்குத்து ஆர் கோம்பை, கோலை கோனேரிப்பட்டி கிழப்பட்டி வடக்குப்பட்டி, பி.மேட்டூர் வலைப்பட்டி மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வார மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!