India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முழுவதும் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், திருச்சி மாவட்டத்தில் 12,491 மாணவர்களும்,15,863 மாணவிகளும் என மொத்தம் 28,354 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 13வது இடத்திலிருந்த, திருச்சி மாவட்டம் தற்போது 12 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. திருச்சியின் தேர்ச்சி சதவிகிதம் 95.74.இது கடந்த ஆண்டு 96.02 சதவீதமாக இருந்தது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை இதில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.44.அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 95.74 சதவீதமாகும். +2 தேர்வினை 29,615 மாணவர்கள் எழுதிய நிலையில், 28, 354 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், வரும் நாட்களிலும் வெயில் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சியில் 42.1 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
திருச்சி மாநகராட்சி 51 முதல் 57 வரை 7 வார்டுகளுக்கு வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரம் தடை இல்லாமல் குடிநீர் வினியோகிக்கும் திட்டம் பரிட்சார்த்த முறையில் செயல் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வேலை நேற்று ஆரம்பமானது. கரூர் ரோட்டில் குழாய்கள் பதிக்கும் பணி வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி ஒப்பந்ததாரருக்கு ஜீயபுரம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
திருச்சியில் அடுத்த பத்து நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வெயிலின் அளவு 110 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு இருக்கும் என்றும் இதனால் அனல் காற்று வீச கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், நீர் ஆகாரங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையத்தில் நேற்று பயணிகளுக்கு தண்ணீர் மற்றும் ஓ ஆர் எஸ் பாக்கெட்டுகளை வழங்க PF 5/TPJ இல் ஹைட்ரேஷன் ஹெல்ப் டெஸ்க் அமைப்பை
சேர்ந்த பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் 19 கேடட்கள் வணிக ஊழியர்களுடன் சேர்ந்து 16848 SCT-MV விரைவு வண்டியில் கிட்டத்தட்ட 350 பயணிகளுக்கு தண்ணீர் மற்றும் ஓ ஆர் எஸ் பாக்கெட்டுகளை வழங்கினர்.
இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் வல்லத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சி பிளாஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர் சஹான் அகமது முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
கண்ணனூரை சேர்ந்த தினேஷ்குமார்.அப்பகுதியில் ஹைப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.அவர் நேற்று சூப்பர் மார்க்கெட்டில் இருந்தபோது மணிகண்டன், விக்னேஸ்வரன், நேதாஜி, ரமேஷ் ஆகிய நான்கு பேர் அங்கு இருந்த சில பொருட்களை திருடி செல்ல முயன்றனர். அப்போது தினேஷ் குமார் அதனைக் கேட்டபோது அவர்கள் மிரட்டி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர்.
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்தார்.தனியார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.அதை நம்பி 13 லட்சத்து 15, 500 ஐ முதலீடு செய்தார்.முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் கிடைக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.கொடுக்க மறுக்கவே சைபர் கிராம் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்தார்.தனியார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.அதை நம்பி 13 லட்சத்து 15, 500 ஐ முதலீடு செய்தார்.முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் கிடைக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.கொடுக்க மறுக்கவே சைபர் கிராம் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.