India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக National Defence Academy And Naval Academy Examination 2024 ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மொத்தம் 469 பேர் எழுத உள்ளனர். இதற்காக திருச்சியில் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி கே.கே. நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் இன்று பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி 30 மனுக்களை பெற்றுக்கொண்டு, அந்த மனுக்கள் மீது உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். மேலும் உரிய பதிலளிக்க அறிவுரை வழங்கியும், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையிலான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். இதில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் உள்ள பெண் வேலைநாடுநர்களை தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தும் நோக்கத்துடன், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 29, 30ஆம் தேதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ கல்வி தகுதியுடைய 18 முதல் 21 வயதுடைய பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சி ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக National Defence Academy And Naval Academy Examination 2024 ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மொத்தம் 469 பேர் எழுத உள்ளனர். இதற்காக திருச்சியில் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வையம்பட்டியில் சூர்யா நினைவு அறக்கட்டளை மற்றும் வையம்பட்டி ஊராட்சி மன்றம் இணைந்து உலக சாதனை நிகழ்வை இன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் பெரம்பலூர் தனியார் பள்ளியை சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் விமல் என்பவர் 206 நாடுகளில் கொடியை கண்டு, நாடு மற்றும் அதன் தலைநகரை 6.58 நிமிடங்களில் சொல்லி உலக சாதனை புரிந்திருக்கிறார். இதற்கு பெற்றோர்கள், மாணவ மாணவிகள், ஊடகத்தினர் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்தினர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்படும் விடிவெள்ளி சிறப்பு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சீருடைகளை வழங்கினார். மேலும் அங்கு இருக்கும் குழந்தைகளுடன் உரையாடி, கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்தும், பாட புத்தகங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டார்.
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் வருகின்ற ஆக.31ஆம் தேதி அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமானது காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து மேலும் தகவலுக்கு 0431-241272 என்ற எண்ணில் அழைக்கலாம்.
திருச்சி காந்திமார்க்கெட் சவுராஷ்ட்ரா தெருவில் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கால்வாய்க்குள் கைத்துப்பாக்கி ஒன்று கிடந்தது. அதை எடுத்து, சாக்கடை கால்வாய்க்கு வெளியே போட்ட அவர்கள், இதுபற்றி காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்பில் பொய்யாமொழி 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று திருச்சி மன்னார்புரம் பகுதியில் அமைந்துள்ள விழியிலந்தோர் மகளிர் மறுவாழ்வு மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலை உணவும், அங்கு இருக்கும் பொது மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கினார். மேலும் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கு தனது கைகளிலே அமைச்சர் உணவு பரிமாறினார்.
Sorry, no posts matched your criteria.