Tiruchirappalli

News September 5, 2024

திருச்சியில் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் வேலை தேடும் பெண்களுக்காக, டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் தொடர்புக்கு 0431-2413510, 94990-55901, 94990-55902 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.

News September 5, 2024

திருச்சி காட்டூர் பகுதியில் லாரி மோதி விபத்து

image

திருவெறும்பூர் அடுத்த காட்டூர் பகுதியில் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி பஞ்சு மூட்டை ஏற்றிக்கொண்டு வந்த லாரி இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனால் தஞ்சை திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News September 4, 2024

மாணவர்களுடன் உணவு அருந்திய ஆட்சியர்

image

ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற நல்விருந்து தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேவதி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 4, 2024

பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி வாபஸ்

image

திருச்சி பள்ளிகளில் இனி விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி எடுக்க வேண்டாம் என மாவட்ட பள்ளி கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா அறிவித்துள்ளார். மேலும், முன்னதாக உறுதி மொழி எடுக்க கூறி வெளியிட்ட சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடுவது தொடர்பான உறுதிமொழி சுற்றறிக்கை வாபஸ் பெறப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

News September 4, 2024

திருச்சி மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருச்சி மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி முசிறியில் 6ஆம் தேதி, லால்குடியில் 10ஆம் தேதி, ஸ்ரீரங்கத்தில் 13ஆம் தேதி, திருச்சியில் 17ஆம் தேதி, திருச்சி கிழக்கில் 20ஆம் தேதி, மணப்பாறையில் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளமாறு அவர் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை: திருச்சி முதலிடம்

image

திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் வட்டார அளவிலான ஓரிட சேவை மையம் தொடங்குவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 48,996 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் 46,086 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

News September 4, 2024

திருச்சி போலீசாரால் பரபரப்பு

image

திருச்சி மேலப்புதூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சகாயராணி அவரது மகன் சாம்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் போது செய்தியாளர்களிடமிருந்து காப்பாற்றி துண்டு போட்டு போலீசார் அழைத்துச் சென்ற சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. போக்சோ குற்றவாளி மீது போலீசார் ஏன் அக்கறை காட்டுகிறார்கள் என்பது திருச்சி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News September 4, 2024

தப்பி ஓட முயன்ற ரவுடி கைது

image

திருவெறும்பூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்த ரௌடிகள் ஜீவா மற்றும் அருண்குமார் ஆகியோர் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் விரட்டிப் பிடிக்க முயன்றதில், ஜீவா அருகிலிருந்த வாய்க்காலில் தவறி விழுந்தார். இதில் ஜீவாவின் கால் முறிந்தது. இதையடுத்து போலீசார், மேற்கண்ட இருவரையும் கைது செய்து, ஜீவாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News September 4, 2024

முசிறி அரசு கல்லூரி மாணவி சாதனை

image

முசிறி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி லாவண்யா சங்க கால நூல்களில் ஒன்றான நாலடியார் முழுவதையும் பிராமி தமிழில் எழுதியுள்ளார். உலகிலேயே நாலடியாரை பிராமி தமிழில் எழுதிய முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார். சாதனையை ஜூனியர் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு திங்களன்று அங்கீகரித்துள்ளது. ஷேர் செய்யவும்

News September 4, 2024

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

image

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரி மற்றும் டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு பி.எஸ்.சி., பி.சி.ஏ., டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். சம்பளம் மாதம் ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் நேரிலோ அல்லது 0431-2618125 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என வாழை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யவும்

error: Content is protected !!