Tiruchirappalli

News September 7, 2024

திருச்சியில் காதலன் இறந்த சோகம்; காதலி தற்கொலை

image

துவாக்குடி வடக்கு மலை சா்ச்வீதியைச் சோ்ந்த ப்ரீத்திஜூட் (20) ,எழில் நகரை சோ்ந்த சரத் பிரகாஷ் என்பவருக்கும் ப்ரீத்திக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்ததால், கடந்த ஆக.16ஆம் தேதி சரத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பின்னர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ப்ரீத்தியை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைக்கு பலனின்றி நேற்று உயிரிழந்தாா்.

News September 7, 2024

மணப்பாறை பெண் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு

image

மணப்பாறை தாலுகா, கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்வராணி (40). இவரது உறவினர் பாலமுத்து (25). கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலமுத்து அருகில் கிடந்த கட்டையால் செல்வராணி தலையில் அடித்ததில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் பாலமுத்துவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது .

News September 6, 2024

மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக பயணம்

image

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருச்சி, சென்னை காஞ்சிபுரம் மயிலாடுதுறை, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் உள்ள வைணவ கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் 1000 பேரை கட்டணமில்லாமல் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 60-70 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியமாகும். மேலும் விபரங்கள் www.hrce.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

News September 6, 2024

திருச்சியில் பூக்கள் விலை கடும் உயர்வு

image

ஸ்ரீரங்கம் பூச்சந்தைக்கு பல பகுதிகளில் இருந்து பூ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டமானது வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் மல்லிகை பூ கிலோ ரூ.550-க்கும், முல்லைப்பூ, ஜாதிப்பூ, சம்பங்கி, ஆகியவை கிலோ தலா ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் விரப்பனையாகிறது. இதனால் பூ வியாபரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News September 6, 2024

திருச்சி மாவட்டத்தில் 1,174 சிலைகளுக்கு அனுமதி

image

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 1,174 சிலைகளை அமைக்கவும், இதில் திருச்சி மாநகரில் மட்டும் 242 இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 6, 2024

திருச்சியில் ரூ.64 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

image

மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு ஏா் ஏசியா விமானத்தில் வந்த 3 பயணிகள் ரூ. 64.02 லட்சம் மதிப்புள்ள 898 கிராம் தங்கத்தை கம்பிகள் உள்ளிட்ட வடிவங்களில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

News September 5, 2024

ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

image

திருச்சி, உறையூர், மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். மேலும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அப்பள்ளி ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News September 5, 2024

திருச்சியில் டெமு ரயில்கள் மாற்றம்

image

தெற்கு ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் டெமு ரயில்கள் அனைத்தும், மெமு ரயில்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 9 ரயில்கள் மெமு ரயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. மேலும் மெமு ரயில்களுக்கான பராமரிப்பு முனையம் கட்ட கடந்த நிதியாண்டில் ரூ.50 கோடியில் புதிய முனையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருச்சி மஞ்சத்திடல் பகுதியில் 73 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 5, 2024

திருச்சி சலவை தொழிலாளர்களுக்கு ஒரு நற்செய்தி

image

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற் கீழ் உள்ள பிசி, எம்பிசி வகுப்பை சார்ந்த சலவை தொழிலில் ஈடுபடும் 1,200 பயனாளிகளுக்கு எல்பிஜி மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்க ஆட்சியர் மா.பிரதீப்குமார் நேற்று அறிவித்துள்ளார்.

News September 5, 2024

பள்ளியில் விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி வாபஸ்

image

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடந்த மாதம் 22ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் ‘விநாயகர் சதுர்த்தி அன்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சுற்றறிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

error: Content is protected !!