India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சியில் வரும் 14-ம் தேதி காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

NDA பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “சமயபுரம் மாரியம்மன், ரங்கநாதர், மலைக்கோட்டை விநாயகரை வணங்கி உரையை தொடங்கினார். திருச்சியில் உங்கள் முன் இருப்பதை நான் பெருமிதமான தருணமாக கருதுகிறேன். இந்த நேரத்தில் மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன் எனக் கூறினார். மேலும் இதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளார்” எனக் குற்றச்சாட்டினார்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய EPS,“தேர்தல் வந்து விட்டால் திமுகவிடம் இருந்து அறிவிப்பு வெளியாவது வழக்கம். நாட்டு மக்கள் திமுகவை நம்ப போவதில்லை. திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கை ஒன்றா?. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைத்தும் திமுகவின் அடிமைகளாக உள்ளன. திமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் இலக்கு, ஸ்டாலின் குடும்ப ஆட்சிக்கு இது இறுதி தேர்தல்” எனக் கூறினார்.

பஞ்சப்பூரில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. தமிழக பாஜக முன்னாள், இந்நாள் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றிருக்க பாஜகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் பங்கேற்காததும், அவர்களது பெயர்கள் மேடையில் அமர்வோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “இந்தியாவிலேயே அதிக கொலைகள் நிகழ்ந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மது விற்கப்படவில்லை திணிக்கப்படுகிறது. மத்தியிலும் நம்ம ஆட்சி, தமிழகத்திலும் நம்ம ஆட்சி. மண், மலையைத் தொடர்ந்து கிட்னியையும் கொள்ளை அடித்துள்ளனர். எனவே இந்த ஆட்சியை அகற்ற எங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள்” எனக் கூறியுள்ளார்.

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன் “டெல்லியில் இருந்து ஆட்சி செய்தாலும் பிரதமர் குஜராத்தை சேர்ந்தவர். தமிழ்நாட்டிற்கும் குஜராத்திற்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே தொடர்பு இருந்ததது. மோடிக்கும் தமிழ்நாட்டுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றி, அம்மா ஆட்சியை கொண்டு வர உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்தார்.

NDA பொதுக்கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். அதில், “அண்மையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையையேயான போட்டி எனக் கூறினார். ஆனால் இது தமிழக மக்களுக்கும் குடும்ப ஆட்சிக்குமான போட்டி எனத் தெரிவித்தார். மேலும் தாய் மாமன் வீட்டு சீர் கொண்டு வருவதைப் போல நலத்திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.

கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் கூட்டணி கட்சியின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல உள்ளார்.
Sorry, no posts matched your criteria.