India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முத்தரசநல்லூர் அடுத்த கணவனூர் பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கரத்தில் வந்த காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த வாலிபர் பிரசன்னா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவெறும்பூர் அடுத்த கல்லணை அருகே திருக்காட்டுப்பள்ளி கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை குளிக்கும் போது சென்னையை சேர்ந்த 5 பேர் ஆற்றில் மூழ்கி மாயமாகினர். இவர்களில் 2 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இந்த அசம்பாவித நிகழ்வு திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துவாக்குடி காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் நேற்று போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கல்லணை சாலை பகுதியில் ஆனந்த் என்பவர் டூவீலரில் சுமார் 10 கிலோ அளவிலான புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 12,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆனந்தை கைது செய்தனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது. 5 பிரசித்தி பெற்ற கோவில்கள் இதில் அடங்கும். செப்.17,18,21,22,23,28,29 மற்றும் அக்.2,5,6,9,12,13,16 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவுக்கு www.ttdconline.com எனும் இணைய முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வடுகபட்டி அருகே நேற்று மாலை சட்ட விரோதமாக மண் கடத்தப்படுவதாக மணப்பாறை வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாச்சியர் தலைமையிலான அலுவலர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை நேற்று பறிமுதல் செய்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டையில் வரும் 10.09.2024 அன்று காலை 10 மணி அளவில் திருச்சி தெப்பக்குளம் நந்திகேஷ்வரருக்கு பிரம்மாண்டமான உத்திராட்ச பந்தல் அமைய உள்ளதாக தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் அனிதா தெரிவித்துள்ளார். மேலும் இதில் கலந்து கொள்ள பக்தர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரத்தில் வருகின்ற 09.09.2024ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக அன்று மதியம் முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, லால்குடி, சமயபுரம் பகுதிகளிலிருந்து திருச்சி நோக்கி வரும் பேருந்துகள் புதிய கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டுமென கமிஷனர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஓடு தள விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், விமான நிலையத்தில் இஸ்லாமியருக்கு தொழுகைக்கு இடம் ஒதுக்க வேண்டும், இ-வாகன சேவை கொண்டு வர வேண்டும், விமான நிலையத்திற்கு நிரந்தர பேருந்து சேவை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளதாக திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும், இதற்கான முதல்நிலை தேர்வுகள் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்திய அளவில் பிற நாடுகளுக்கான பயணிகளை கையாளுவதில் திருச்சி விமான நிலையம் கடந்த நிதியாண்டில் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளதாக ஏர்போர்ட் கவுன்சில் ஆப் இந்திய தெரிவித்துள்ளது. மேலும் சிங்கப்பூருக்கான விமான சேவையில் 4-ஆம் இடத்தையும், மலேசியாவுக்கான சேவையில் 2-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. கிழக்காசிய நாடுகளுக்கான விமான போக்குவரத்தில் 5-ஆவது இடத்தை திருச்சி விமான நிலையம் தக்கவைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.