Tiruchirappalli

News September 11, 2024

திருச்சியில் ரூ.14 லட்சம் அபராதம்

image

திருச்சி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இந்த ஆண்டு செப்டம்பர் வரை கால்நடைகளை பிடித்து 14 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நகர் நல அலுவலர் மணிவண்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.

News September 11, 2024

திருச்சியில் ரயில் டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்குவதாக திருச்சி ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 10 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், செப். 12 ஆம் தேதியும், ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்ய செப். 13ஆம் தேதியிலும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய செப். 14ஆம் தேதியும் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய செப்.15ஆம் தேதி தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம்.

News September 11, 2024

கிராவல் கடத்திய லாரி பறிமுதல்: ஆர்டிஓ அதிரடி

image

மருங்காபுரி அடுத்த அழகாபுரியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் நேற்று அவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியை கொண்டு சட்ட விரோதமாக முத்து குளத்தில் செம்மண் கடத்தியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி லாரியை பறிமுதல் செய்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அழகாபுரி விஏஓ கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 10, 2024

சமயபுரம் கோயில் காணிக்கை ரிசர்வ் வங்கியில் முதலீடு

image

சமயபுரம் கோயில் காணிக்கைகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தெரிவிக்கையில், சமயபுரத்தில் காணிக்கையாக செலுத்தும் தங்கம் அனைத்தும் ஒரே தரத்துடன் இருக்காது. இவற்றைத் தரம் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்த பின், பாரத ஸ்டேட் வங்கி மூலமாக மும்பையில் உள்ள அரசின் உருக்காலையில் 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றி, ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்படும் என்றார்.

News September 10, 2024

திருச்சியில் ரயில் டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்குவதாக திருச்சி ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 10 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், செப். 12 ஆம் தேதியும், ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்ய செப். 13ஆம் தேதியிலும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய செப். 14ஆம் தேதியும் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய செப்.15ஆம் தேதி தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம்.

News September 10, 2024

திருச்சி மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு: சீமான் எச்சரிக்கை

image

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது X-தளத்தில், திருச்சி சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து கல்லூரி மாணவி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி அதனை காணொளி பதிவு செய்து மிரட்டியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.

News September 10, 2024

திருச்சியில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

image

அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா சென்று உள்ள தமிழக முதல்வரின் முயற்சியால் “மணப்பாறை தொகுதிக்குட்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் JABIL தொழிற்சாலை அமையவுள்ளது” என அறிவித்துள்ளார். இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் அதற்காக திருச்சி மக்கள் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

image

வாத்தலை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த பெண் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News September 9, 2024

திருச்சி கலெக்டரிடம் குவிந்த மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 514 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.

News September 9, 2024

திருச்சியில் 1700 போலீசார் பாதுகாப்பு பணி

image

திருச்சி மாநகரில் இன்று விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வு காவிரி ஆற்றில் கொண்டாடப்பட உள்ளது. இதனால், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் 1700 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!