India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர், பீரங்கிகுளம், எடமலைப்பட்டிபுதூர், இருதயபுரம், ஸ்ரீரங்கம், பெரிய மிளகுபாறை, காட்டூர், மேல கல்கண்டார்கோட்டை, தென்னூர், திருவெறும்பூர், உறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாளை 23ஆம் தேதி மாலை இலவச காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளதாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாவில் கலந்து கொண்டு சென்னைக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்தார்.இவரை திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் சந்தித்து புத்தகம் வழங்கி வரவேற்று வழியனுப்பி வைத்தார்.முதல்வரின் வருகையால் திருச்சி விமான நிலையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம் கோட்டம் ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடிக்கு இடையே புதிய சுரங்கப்பாதை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு, திருச்சி – திருவனந்தபுரம் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி ரயில்வே மேலாளர் இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
துறையூர் அடுத்த பச்சைமலையில் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி என்ற ஊரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில், தமிழ்நாடு அரசின் மூலம் டோம் வடிவிலான தங்குமிட வசதி மற்றும் ஜிப் லைன் போன்ற பொழுதுபோக்கு அம்சத்தை நிறுவுவதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பச்சைமலை பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்துவர் என கருதப்படுகிறது.
திருச்சி பிஹெச்எல்லில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 650 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதி ஐடிஐ, டிப்ளமோ, பிஏ, பிகாம் மற்றும் பிஇ, பிடெக் படித்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்கள். இதற்கு விண்ணப்பிக்க 23-10-24 அன்று இறுதி நாளாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.trichybhel.com என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சரியாக பணிகளில் ஈடுபடாத 2 காவலர்களை பணியிட நீக்கம் செய்து காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன் மதுபோதையில் இருந்ததாலும், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் ஏட்டு கொள்ளிடம் செக் போஸ்ட்க்கு செல்லாமல் இருந்ததாலும், ஸ்ரீரங்கம் டி.எஸ்.பி. நிவேதா லட்சுமி பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,திருச்சி மாநகர், துறையூர், முசிறி, லால்குடி, மணப்பாறை, துவரங்குறிச்சி ஆகிய பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.
திருச்சி, வாழவந்தான் கோட்டை மற்றும் கும்பக்குடி கிராமம், மணப்பாறை சத்திரப்பட்டி மற்றும் கண்ணுடையான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழில்பேட்டைகளில் காலி தொழில்மனைகள் ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது. எனவே புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது மனைவி குறித்து நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் அவதூறாக பேசிய வழக்கில் தில்லைநகர் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை தில்லை நகர் காவல் நிலையத்திலிருந்து, திருச்சி சைபர் கிரைம் விசாரணைக்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 411 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில், இலவச வீட்டு மனை பட்டா,பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ்,இதர சான்றுகள்,குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.
Sorry, no posts matched your criteria.