India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ரயில் நிலையம் அருகே நேற்று நள்ளிரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸின் கடைசி மூன்று பெட்டிகள் கழண்டு சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில்வே அதிகாரிகள் கழண்ட பெட்டிகளை மீண்டும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொருத்தினர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
துவாக்குடி அடுத்த கருப்பு கோயில் அருகே திருச்சி – தஞ்சை சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது பயணிகள் சென்ற வேன் மோதி 16 பேர் படுகாயம். இவர்கள் 16 பேரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகின்றது.
வாத்தலை அருகே முட்செடிகள் உள்ள பகுதியில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெறுவதை நேற்று தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் 2பேர் வீடியோ எடுத்தனர். இதையடுத்து அவர்களை வழிமறித்த 5க்கும் மேற்பட்டோர் அவர்கள் வைத்திருந்த செல்போனை பிடுங்கி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது இரு செய்தியாளர்களும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருத்துகளை பதிவிடவும்
தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பில் நேற்று தரவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சுமார் 2 கோடி பேர், திருச்சியில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களுக்கு வருகை தந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்களை பதிவிடவும் மற்றும் ஷேர் செய்யவும்
திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்கு நாடு கல்லூரியில் (18.09.2024) நாளை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் திறன் பயிற்சிக்காக இலவச முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற உள்ளது. எனவே, 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி & தோல்வியுற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சியில் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை தொடர்ந்து 27 நாட்களுக்கு 4வது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதங்கள் வரை உள்ள கிடேரி கன்றுகளுக்கு போடப்பட உள்ளது. எனவே கிடேரி கன்றுகள் வைத்திருக்கும் விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மோகன் தாஸ், மகளிர் அணி தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமயபுரம் அருகே தெற்கு இருங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் காவலராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பியபோது கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.30,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 468 மனுக்கள் வருகை தந்தது. இதில், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் என்ஜினீயரிங் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் (எண்:22676) 2 மணி நேரம் தாமதமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் என திருச்சி ரெயில்வே கோட்ட சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.