India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையம் அமைந்துள்ளது. நேற்று விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் முறையாக பராமரிக்கப்படாததால் இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையில் நனைந்து மூட்டையில் உள்ள நெல்கள் முளைக்க தொடங்கியதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் பச்சபெருமாள் பட்டி அடுத்துள்ள பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. கொல்லிமலையில் உற்பத்தியாகும் நீர் இப்பகுதியில் சமதள பரப்பில் ஓடுவதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து நீராடி செல்கின்றனர். தொடர் மழைக்காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிப்பதற்கு இன்று 2வது நாளாக தடை விதித்துள்ளனர்.
நவல்பட்டு அண்ணா நகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் வளர்மதி (50). இவரது மகன் மணிகண்டன் (29). நேற்று மது போதையில் இருந்த மணிகண்டன் தாய் என்றும் பாராமல் தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வளர்மதியின் அண்ணன் மகனான மணிகண்டன் (28) இதை தட்டிகேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வளர்மதியின் மகன், தட்டி கேட்ட நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி, சிறுகனூர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (19.11.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், வீ.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பு, தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தாதம்பட்டி, தச்சம்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மணி மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் மலேசியா கோலாலம்பூரில் இருந்து திருச்சி பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பயணி ஒருவர் மறைத்து எடுத்து வந்த ரூ.3.46 லட்சம் மதிப்பிலான 34,600 எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அமீர் ஹுசைன் இவர் தனது பிறந்த ஊர் மற்றும் பிறப்பு தேதியை மாற்றிக் கொடுத்து போலி பாஸ்போர்ட்டில் அபுதாபி செல்வது தெரியவந்தது. இதேபோல், சிவகங்கையைச் சேர்ந்த கதிரேசன் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்துள்ளார். அவரை சோதனை செய்ததில், அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இருவரையும் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அதன் ஒரு பகுதியாக நவ.30-அம் தேதி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று அரங்கநாதரை தரிசனம் செய்ய உள்ளார். பின்னர், மீண்டும் அங்கிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் குடியரசுத் தலைவர் மாலை 6.45 மணியளவில் விமான படை தனி விமானம் மூலம் தில்லிக்குத் திரும்ப உள்ளார்.
திருச்சி ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை சிப்காட் எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 7 மணிக்கு சுமார் 40வயது மதிப்புள்ள ஆண் அவ்வழியே சென்ற ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இவருக்கு 2 கையின் மணிக்கட்டுக்கு கீழ் பழைய தீக்காய தழும்புகள் உள்ளன. எனவே தகவல் தெரிந்தால் 86672 59844 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள திருச்சி இரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
ஆளவந்தநல்லூரை சேர்ந்த மனோகா் சொந்தமாக வாகனம் ஓட்டி தொழில் செய்யும் நிலையில், நேற்று சவாரி இருப்பதாகக் கூறி வாகனத்துடன் வெளியில் சென்றவர், நள்ளிரவில் சங்கா் நகா் அருகே, தனது வாகனத்துக்குள் தலையில் அடிபட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையறிந்த சோமரசம்பேட்டை போலீஸாா் மனோகரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
தேனியை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரம் ஆகிவிட்டதால் ஒண்டிக்கருப்பு கோவிலில் தங்க முடிவு செய்துள்ளார். பிறகு, கோவில் அருகே நேற்று காலை சமைத்துக் கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறி கோவில் குதிரை சிலை அருகில் உள்ள போஸ்ட் மரத்தை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.