Thiruvarur

News September 22, 2024

திருவாரூர் எஸ்.பி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

image

திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ஒரு நாள் கஞ்சாவிற்கு எதிரான தீவிர சோதனை நடத்தினர். இதில் நேற்று 16 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 9½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுபோல் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. எச்சரித்துள்ளார்.

News September 22, 2024

திருவாரூர் ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி

image

திருவாரூர் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்ந்த பல தேவைகளை பயணிகள் நல சங்கம் திருச்சி கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம்
வலியுறுத்தியதின் பேரில், திருவாரூர் ரயில் நிலையத்தில் அனைத்து நடை மேடைகளிலும் மேல் கூரைகள் அமைக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் இருக்கைகளும் அமைக்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 21, 2024

நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சை டிஐஜி ஆய்வு

image

நீடாமங்கலம், தேவங்குடி காவல் நிலைய பழைய மற்றும் சமீபத்திய வழக்கு கோப்புகளை தஞ்சை காவல் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் திருவாரூர் மாவட்ட அளவில் நீடாமங்கலம் காவல் நிலையம் மூன்றாம் இடம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தார். காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளார் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், போலீசார் உடனிருந்தனர்.

News September 21, 2024

திருவாரூர் ரயில் நிலைய முகப்பு தோற்றத்தில் ஆழி தேர்

image

திருவாரூர் இரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் புதிய இருக்கை வசதி, நவீன கழிப்பிட வசதி பயனிகள் ஓய்வு அறை, புதிய நடைமேடை, கார் பார்க்கிங் வசதி மற்றும் ரயில் நிலையம் முன் அமைய உள்ள புதிய முகப்பு தோற்றத்தில் உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழி தேர் இடம் பெறுவது குறிப்பிடதக்கது.

News September 21, 2024

திருவாரூரில் நாளை விவசாயிகள் கருத்தரங்கம்

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அரங்கில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பாரம்பரிய நெல் வயல்களில் நுண்ணுயிர் பெருக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு 8111080101 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 21, 2024

மன்னார்குடியில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்த செய்யும் நோக்கத்தோடு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 05.10.2024 சனிக்கிழமை அன்று மன்னார்குடி ராஜகோபாலசாமி கல்லூரியில் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News September 20, 2024

திருவாரூர் மாவட்டத்தில் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை, திருவாரூர் புத்தக திருவிழாவின் போது வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் பங்கேற்க dlothiruvarur@gmail.com என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News September 20, 2024

திருக்கண்ணைமங்கை பெருமாள் கோயிலில் நாளை சிறப்பு திருவிழா

image

திருக்கண்ணைமங்கை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பக்தவச்சல பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நாளை கண்ணனை கண்டித்த கண்ணன் குற்றவாளி என்கிற தலைப்பில் வழக்காடு மன்றம் நடுவர் அறிவழகன் தமிழில் ஆய்வாளர் நாளை மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News September 20, 2024

பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

image

பொதுமக்களை அச்சுறுத்தி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, அவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தலையாமங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். மன்னார்குடி டிஎஸ்பி ஆய்வின் போது உடன் இருந்தார்.

News September 19, 2024

திருவாரூர் எஸ்.பி. தலைமையில் சிறப்புக் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தலைமையில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

error: Content is protected !!