Thiruvarur

News October 11, 2024

ரயில் விபத்தில் இளைஞர் பலி

image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் சூர்யா (எ) அபினேஷ். கடந்த 6ஆம் தேதி செங்கல்பட்டு அருகில் ரயில் விபத்தில் உயிரிழந்தார். நான்கு நாட்களாக வீட்டிற்க்கு எந்த தொடர்பும் இல்லாத காரணத்தினாலும் போன் ஸ்விட்ச் ஆப் ஆன நிலையில் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது இறந்த விபரம் தெரியவந்துள்ளது. இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

News October 11, 2024

திருவாரூரில் தொடர் திருட்டு – 8 பேர் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக செல்போன் கோபுரங்களில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருடு போவதாக, நீடாமங்கலம், பேரளம், நன்னிலம், குடவாசல், கோட்டூர் ஆகிய காவல் நிலையங்களில் புகார்கள் பெறப்பட்டது. இந்நிலையில், தொடர் திருட்டில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News October 10, 2024

திருவாரூரில் ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (10.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்ய காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

கருவறையில் கிரிக்கெட் விளையாடினால் தான் தப்பு

image

திருவாரூரில் பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்த கட்சியின் பொறுப்பாளர் ஹெச்.ராஜா, “சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடுவது குற்றச் செயல் இல்லை. கோயிலில் தான் விளையாடினார்கள். கருவறையில் விளையாடவில்லை” என தெரிவித்தார்.

News October 10, 2024

திருவாரூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை

image

வரும் அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்டா பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

News October 10, 2024

திருவாரூர் அருகே பெண் வெட்டி கொலை

image

கூத்தாநல்லூர் தாலுகா 100 மேல பருத்தியூரை் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணகிரசி (48). இவர், நேற்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும், கொலையாளிகள் அவர் அணிந்துருந்த 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News October 10, 2024

திருவாரூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 33 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமன மூலம் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கடைசி தேதி 7.11.2024 மாலை 5:45 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, வயது போன்றவற்றை https://www.drbtvr.in இணையதளத்தில் காணலாம்.

News October 10, 2024

மானியத்தில் தொழில் தொடங்க ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் தொழில் முனைவராக விருப்பமுள்ளவர்கள், ஏழ்மையான ஆதரவற்ற கைம்பெண்கள் கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 40 கோழி குஞ்சுகள் வாங்க 50% மானியத்தில் ரூபாய் 1600 வழங்கப்படும். மேலும் 30% ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர பெண்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

எஸ்பி அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் இருந்து துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர். நிலம் குற்ற வழக்குகள் கையாள்வது குறித்து எஸ் பி அறிவுரைகளை வழங்கினார்.

News October 9, 2024

திருவாரூரில் ரோந்து காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (09.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!