India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 500 ஏக்கரில் நேரடி விதைப்பாகவும் நடவு பணியாக 47 ஆயிரத்து 500 ஏக்கரிலும் என மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியானது தற்போது நடைபெற்றுள்ளது. நீண்ட கால ரகங்களான சிஆர் 1009 மற்றும் ஏடிடி 51 மற்றும் 54 மற்றும் ஐ ஆர் 20 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் நேரடி தெளிப்பு மற்றும் நடவு முலம் பயிரிட்டுள்ளனர்.
கொரடாச்சேரி அருகே உள்ள வெண்ணவாசல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், திருவாரூர் மகிளா நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை திருவாரூர் எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.
திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவர்கள் வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருள் விதிகள் 2008 ன் படி விதி எண் 84ன் கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் https://www.tnsevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவும் அல்லது இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூர் மாவட்ட திமுக அவைத்தலைவர் க.தன்ராஜ் தலைமையில் வரும் 08.10.24 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு திருவாரூர் அஞ்சுகம் முத்துவேலர் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என திருவாரூர் மாலட்ட திமுக செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (04.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் விபரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இந்த ரோந்து பணிகளில், பொதுமக்கள் அவசர உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
தமிழகத்தின் விருதுநகர், தென்காசி, கோவை, நீலகிரி, தஞ்சை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்.4) இரவு 8 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் தனியார் இடத்தில் சிலிக்கான் மண் குவாரி அமைக்ககூடாது என வலியுறுத்தி சிலிக்கான் மண் குவாரி உள்ள இடத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சாமி அரசினர் கலை கல்லூரியில் நாளை (அக்.5) காலை 10 மணி முதல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதால் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, பட்டய படிப்பு, முடித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம் மேலும் அதிக தகவல்கள் பெற tnprivatejobs.gov.in என்ற தளத்தில் தகவலை தெரிந்துகொள்ளலாம்.
கீழநத்தத்தை சேர்ந்தவர் தவமணி. இவர் நீடாமங்கலத்தில் இருந்து இன்று மன்னார்குடிக்கு பேருந்தில் சென்ற போது அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலிசெயின் காணாமல் போனது. இதுகுறித்து தவமணி நீடாமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அதே பேருந்தில் பயணம் செய்த காயத்ரி என்பவர் தாலி செயினை திருடியது தெரியவந்தது. காயத்ரியிடம் இருந்து செயினை மீட்டு காயத்ரி சிறையில் அடைத்தனர்.
புள்ளமங்கலம் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சிவா என்பவரை தாக்கிய திமுக கிழக்கு ஒன்றிய செயலாளார் ஐ.வி.குமரேசனை கைது செய்ய வலியுறுத்தி வடபாதிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பதவியில் இருந்து ஐ.வி.குமரேசனை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
Sorry, no posts matched your criteria.