Thiruvarur

News December 1, 2024

கர்ப்பிணி பெண்கள் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் பிறப்பதற்கு கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது விவரங்களை குழந்தை மையங்களில் பதிவு செய்து அங்கு அளிக்கப்பட்டு வரும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்

News November 30, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 70 கீ.மி வேகத்தில் காற்று வீசக்கூடும்

image

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த புயலானது விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் இன்று (நவ.30) மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 50-60 கீ.மி வரையிலும், அவ்வப்போது 70 கீ.மி வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் 

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பயிர் காப்பீடு செய்யும் தேதி இன்று நிறைவடைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை அரசின் உத்தரவின்படி மழை மற்றும் வெள்ள நிவாரணங்கள், விவசாயிகளை பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு, தொடர்ந்து பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நவ.15 நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நவ.30 வரை நீட்டிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைகிறது. SHAREIT

News November 29, 2024

குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து

image

திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.30) நடைபெற இருந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள இருந்தார். இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு காரணங்கள் கருதி குடியரசு தலைவரின் பயணம் ரத்து செய்யப்படுவதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

குடியரசுத் தலைவர் நாளை திருவாரூர் வருகை

image

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை (நவ.30) திருவாரூர் நீலக்குடியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் மற்றும் மத்திய பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News November 29, 2024

திருவாரூரில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிலிருந்து இன்று நவம்பர் 29 மழை அளவு குறைந்துள்ளதால் திருவாரூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று செயல்படும் என அறிவித்துள்ளார்.

News November 29, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 405 வீடுகள் சேதம்

image

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடைவிடாமல் கனமழை செய்து வருகிறது. தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 333 குடிசை வீடுகள், 72 ஒட்டு வீடுகள் என மொத்தம் 405 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

News November 28, 2024

திருவாரூர் மாவட்டத்திற்கு தீவிர மழை எச்சரிக்கை

image

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.29) திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதி தீவிர மழை மற்றும் நாளை மறுநாள் (நவ.30) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!

News November 28, 2024

திருத்துறைப்பூண்டியில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும், இளவரசநல்லூரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கும் இன்று (நவ.28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News November 28, 2024

மாவட்டத்தில் 281.6 மி.மீ. மழை பதிவு

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது வரை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருக்கும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்ட முழுவதும் 281.6 மிமீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

error: Content is protected !!