Thiruvarur

News December 3, 2024

இலவச வீட்டு மனை பட்டா விண்ணப்பிக்க அழைப்பு

image

திருவாரூர் மாவட்டம் வைப்பூர் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை  சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட புல எண்123, 124, 127, 128, 129, 130 ஆகியவை நில எடுப்பு செய்யப்பட்டுள்ளன. சுமார் 450 மனைப்பிரிவுகள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட தற்போது விண்ணப்பங்கள்வர வேற்கப்படுகிறது என  ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார். 

News December 3, 2024

நீடாமங்கலம் பகுதி மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

image

நீடாமங்கலம் நகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சாய்பாபா சிலையை வைத்துக்கொண்டு சிலர் பகல் நேரங்களில் ஆட்களில்லாத வீடுகளை பார்த்துக்கொண்டு இரவு நேரங்களில் அந்த வீடுகளில் திருட்டு வேலைகளில் ஈடுபடுவதாகவும் அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் சிறிது கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News December 3, 2024

திருவாரூர்: விண்ணப்பிக்க டிச.16 ஆம் தேதி கடைசி நாள்

image

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையம் நடத்துவதற்கு டிச.16 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அந்நிறுவனத்தின் பொது மேலாளா் பால. சந்திரசேனா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவர் வெளியிட்ட: திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையங்களை இயக்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பான விவரங்களை இணையதள முகவரியில் காணலாம்.

News December 2, 2024

திருவாரூர் ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (02.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து மனு 

image

புது டெல்லியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் இன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு தேவையான ரயில் சார்ந்த கோரிக்கை மனுவை அளித்து வலியுறுத்தினார்.

News December 2, 2024

மன்னை எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்

image

சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வரும் மன்னை எக்ஸ்பிரஸ் (Train No.16179) இன்று (டிச.2) இரவு 10:55 பதிலாக 11:55 மணிக்கு புறப்படும் என ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக இன்று புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News December 2, 2024

திருவாரூர் ஆட்சியரகத்தில் குவிந்த மனுக்கள் 

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட் கிழமையை முன்னிட்டு பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். இதில் சுமார் 282 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மனுக்கள் மீதான நடவடிக்கை உடனே மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

News December 2, 2024

நிவாரண நிதி வழங்கிய ஆட்சியர்

image

தாமரங்கோட்டை அடுத்த கரிசல்காடு கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த, திருவாரூர் கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த துர்க்கை அம்மாள் கணவர் சுப்பிரமணியனிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

News December 2, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 88.8 மில்லி மீட்டர் மழை பதிவு

image

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததை அடுத்து 20 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 88.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News December 2, 2024

திருவாரூரில் பெண் டாக்டரிடம் தகராறு: 4 பேர் கைது

image

ஓகைப்பேரையூரை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் கடந்த நவ.29 விஷம் அருந்தியதால் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய நண்பர்களான தமிழ்ச்செல்வன் (25), குமரன் (24), பாலமுருகன் (21), அஜித்குமார் (29) ஆகியோர் சிகிச்சை சரியாக அளிக்கவில்லை என பெண் பயிற்சி மருத்துவரான நிவேதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர் அளித்த புகாரின் பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!