India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நன்னிலத்தில் சௌந்தர்யா-மதியழகன் தம்பதியின் 5 மாதக் கை குழந்தை வர்ணிகா ஸ்ரீ மிகவும் அபூர்வமான முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்லார். இந்நிலையில், குழந்தைக்கு வேண்டிய ஊசியின் விலை ரூ.16 கோடி ஆகும். ஒவ்வொருவரும் ரூ.10 கொடுத்ததால் என் குழந்தையை காப்பாற்ற உதவியாக இருக்கும் என பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
ஆசியாவின் மிகப்பெரிய காடான முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல வனத்துறை சார்பில் படகுகள் உள்ளது. இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வனத்துறை தடை விரித்து இருந்த நிலையில் தற்போது சகஜ நிலைக்கு வந்ததால் இன்று முதல் தடையை நீக்கி படகில் சுற்றுலா செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.
திருவாரூர் நகராட்சி அலுவலக தொலைபேசி எண்ணுக்கு கடந்த 4ஆம் தேதி காலை 10 மணி அளவில் தொடர்பு கொண்டு நான் தமிழக துணை முதல்வரின் உதவியாளர் எனக் கூறி நகராட்சி ஆணையரிடம் ரூபாய் 7500 மோசடியில் ஈடுபட்ட, எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரை காவல் துறையினர் நேற்று கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார்குடி பகுதியை சேர்ந்த சதீஷ் பிரபு, தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான மருத்துவ செலவின தொகையை, வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது மன்னார்குடி நுகர்வோர் சங்க இணைச் செயலாளர் வேல்முருகன் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சதீஷ் பிரபுவுக்கு மருத்துவ செலவு தொகையாக ரூ.4,48,200 வழங்க நேற்று நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. ஷேர் செய்யவும்
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்துப்பேட்டை கந்தூரி விழாவிற்காக கடந்த மாதம் உள்ளூர் விடுமுறை அளிக்க பட்டதை ஈடு செய்யும் பொருட்டு நாளை (7/12/24) சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
பாபர் மசூதி தினத்தையொட்டி ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே போலீசார் ரயில்களில் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் நினைவு கூறுவதை முன்னிட்டு இன்று எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வந்த விரைவு ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர்.
திருவாரூர் கடைவீதியில் தியாகராஜசுவாமி கோயிலுக்கு சொந்தமான 5,688 சதுரஅடி நிலம் திருவாரூரைச் சோ்ந்த மன்சூா்அலி என்ற வாடகைதாரரின் பராமரிப்பில் இருந்தது. இந்த இடத்தை மற்றொருவர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் இந்த நிலத்தை மீட்டுத் தருமாறு 2020இல் மன்சூா்அலி தொடர்ந்த வழக்கில்அக்டோபரில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் நிலம் இந்துசமய அறநிலையதுறை அதிகாரிகள் போலீசார் மூலம் மீட்டு மன்சூர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வரும் 9ஆம் தேதி நடைபெறுவதாக கலெக்டர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது குறிப்பாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தட்டாங்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 24.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட வண்டிக்கார தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று ஓடம்போக்கி ஆற்றில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு சென்று பார்த்தபொழுது 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.