India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம், காளாச்சேரியை சேர்ந்தவர்கள் அஜித் குமார் (27), சதீஷ்குமார் (29). நண்பர்களான இருவரும் திருச்சி லால்குடி நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் கல் பதிக்கும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சதீஷ் அருகில் இருந்த கம்பியை எடுத்து அஜித்குமாரை தாக்கியுள்ளார். இதில் அஜித் குமார் உயிரிழந்தார்.
திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் இன்று நடைபெறும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமாகிய தேவா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், செயலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு 2023 -24 ஆம் ஆண்டுக்கான நெல் மற்றும் நெல்லுக்கான முழு இழப்பீட்டு தொகை, தற்போது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, மேலும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், உயிரிழந்த கால்நடைகளுக்கான உரிய இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து,முன்னேற்றத்திற்காக வீரதீர செயல் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விபரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையத்தில் (http://awards.tn.gov.in) டிச.20 க்குள் பதிவேற்றம் செய்தால் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜன.24 அரசின் பாராட்டு விருதும், ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும் என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
வலங்கைமான் காவல் சரகத்திற்குட்பட்ட நார்த்தங்குடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (81). மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவை உடைத்து கோவிந்தராஜை கத்தியை காட்டி மிரட்டி திருட முயன்றனர். இந்நிலையில், கோவிந்தராஜ் கூச்சலிடவும் அக்கம்பக்கத்தினர் வந்ததும் தப்பியோடினர். பின்னர், போலீசார் விசாரணையில், சஜாத் அலி, பிரபு ராஜா, செல்வகார்த்தி, கலையரசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் பல்வேறு கட்சிகளிலிருந்து 150க்கும் மேற்பட்டோர் விலகி தமிழக வெற்றி கழகத்தில் கூத்தாநல்லூர் நகர செயலாளர் மருது பாண்டியன், நகர தலைவர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலைவர் மதன் தலைமையில் இணைத்து கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு இன்று டிசம்பர் (9)அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது. காலை 10 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் தேர்வு தொடங்கவுள்ளது. இன்று தமிழ் தேர்வு தொடங்கவுள்ளது என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் டிச.10 மற்றும் 11ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜ்குமார் சின்னம்மா சரோஜினி நேற்று இயற்கை எய்தினார். இந்நிலையில் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் அவரது உடல் தானமாக பெறப்பட்டு இன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த செயல் அந்த பகுதி மக்களின் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்யவும்
மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள சீன பூண்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் வந்ததை அடுத்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். பின்னர் சீன பூண்டு எங்கேயும் விற்பதாக தெரிந்தால் உடனடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.