Thiruvarur

News January 2, 2025

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடிக்கு மது விற்பனை

image

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனையானது உச்சம் தொடுவது தற்போது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் புத்தாண்டை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 100 கடைகளில் சுமார் 2 கோடி அளவுக்கு மது விற்பனையாகியுள்ளது. இருப்பினும் இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிய உங்கள் கருத்து? கமெண்டில் தெரிவிக்கவும்! ஷேர் செய்யவும்..

News January 1, 2025

திருவாரூரில் மாரத்தான் போட்டி அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் திருவாரூரில் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாரத்தான் போட்டி வரும் 7ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜனவரி 6 ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஆதார் நகலுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News January 1, 2025

பெண் காவலரிடம் தகராறு: ஒருவர் கைது

image

சிதம்பரம் பகுதியை சேர்ந்த மஞ்சுளா பேரளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் உணவு உண்ட போது, நன்னிலத்தை சேர்ந்த சீனிவாசன் என்கிற நபர் டிபன் கடையில் சட்னி வைக்கவில்லை எனக்கூறி தகராறு செய்துள்ளார். இது சம்பந்தமாக கேட்ட காவலரை சீனிவாசன் தாக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 1, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் புத்தாண்டு வாழ்த்து

image

2025 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பொதுமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ‘வெற்றி, சந்தோஷம் மற்றும் உன்னதமான சாதனைகள் நிரம்பிய ஆண்டாக 2025 அமையட்டும்’ என அவர் தெரிவித்துள்ளார். 

News January 1, 2025

மரணமடைந்த பத்திரிகையாளர் வாரிசுக்கு நிதியுதவி

image

திருவாரூர் மாவட்ட செய்தியாளர் ரமேஷ் பணியில் இருக்கும் போது கடந்த 4.7.2023 அன்று உயிரிழந்தார். அவரது மனைவியும், வாரிசு தாரருமான கல்யாணிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் நேற்று வழங்கினார். இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உடனிருந்தார்.

News December 31, 2024

திருவாரூரில் உயர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

image

திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக ஆடியோ வைரலான நிலையில் பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய விசாரணை நடத்திட வலியுறுத்தினர். இதனையடுத்து திரு.வி.க. அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு குறித்து உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குநர் தலைமையில் அதிகாரிகள், போராசிரியர்கள் உள்பட பலரிடம் இன்று விசாரணை நடத்தினர்.

News December 31, 2024

கலைத் திருவிழாவின் மாநில அளவிலான போட்டி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நடைபெறும் பள்ளி மற்றும் நேரம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலப் போட்டிக்கு தேர்வான அனைவரும் இதில் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

News December 31, 2024

தேசிய அளவில் திருவாரூர் மாணவி முதலிடம்

image

சென்னையில் தேசிய அளவிலான 30-ஆவது சப் ஜூனியர் வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த டிச.28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த B.ஹன்சிகா என்ற மாணவி தமிழ்நாடு அணியில் கலந்துகொண்டு, தேசிய அளவிலான வலைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

News December 31, 2024

திருவாரூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

image

திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், கூத்தாநல்லூர் வட்ட சதுரங்க கழகம், SS சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் சதுரங்க போட்டி ஜன.5 காலை 9 மணியளவில் கூத்தாநல்லூர் மன்ப உலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க முன்பதிவு அவசியம், கலந்து கொள்ள விரும்புவோர் 9688006007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

News December 31, 2024

திருவாரூரில் சைக்கிள் ரேஸ் போட்டிகள் அறிவிப்பு

image

திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள குறிப்பில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜன.4-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் ரேஸ் போட்டிகள் திருவாரூரில் நடைபெற உள்ளன. வயது அடிப்படியில் 3 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ள, ஜன.4 காலை 6 மணிக்கு திருவாரூர் நகராட்சி அலுவலகத்திற்கு பள்ளியில் வழங்கிய வயது சான்றிதழுடன் மாணவர்கள் வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!