Thiruvarur

News January 6, 2026

திருவாரூர்: அரசு கல்லூரியில் தற்கொலை விழிப்புணர்வு கூட்டம்

image

மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் கன்னா மற்றும் மன நல கவுன்சிலர் யுவராஜ் ரெட் கிராஸ் நிர்வாகிகள், வரதராஜன், கோபால், ராஜப்பா ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

வடகோவனூர்: அரசு பள்ளியில் தேசிய பறவைகள் தின நிகழ்ச்சி

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் வடகோவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய பறவைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் முரளி தலைமையில், மாணவர்கள் வயல்வெளிக்கு சென்றனர். அங்கு பறவைகளை உற்று நோக்கி, பறவைகளின் இயல்புகள் பற்றி ஆசிரியர் விளக்கம் தர, மாணவர்கள் தெரிந்து கொண்டனர். இந்நிகழ்வில் பறவைகளை காப்போம்!..பூமியை பாதுகாப்போம்!.. என்று மாணவர்கள் முழக்கமிட்டனர்.

News January 5, 2026

திருவாரூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கரவாசல் தியாகராஜசுவாமி திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான தியாகராஜசுவாமிக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News January 5, 2026

திருவாரூர்-காரைக்கால் ரயில் சேவை ரத்து

image

திருவாரூர், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

திருவாரூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!

News January 5, 2026

திருவாரூர் மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆதார் மையங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூரில் ஜன.11 அன்றும், கூத்தாநல்லூரில் ஜன.18 அன்றும், நீடாமங்கலத்தில் ஜன.25 அன்றும் நடைபெற உள்ளது. ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்து பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News January 5, 2026

திருவாரூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 5, 2026

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

நெகிழி ஒழிப்பை ஊக்குவிக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் துறை சார்பில் பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜன.15-ம் தேதி கடைசி நாளாகும். மேலும் அறிய https://Tiruvarur.nic.in இனைய தளத்தை பார்க்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!