Thiruvarur

News April 8, 2024

அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு 

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் மேலும் மருதூர், வடபாதி, பிச்சங்கொட்டகம்,    கட்டிமேடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று (8.4.2024) அதிமுக நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்ஜித் சிங் சங்கருக்கு, அதிமுக மாவட்ட செயலாளர், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜர் கூட்டணி கட்சித் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார். 

News April 8, 2024

திருவாரூர்: சாலை விபத்தில் இளைஞர் பலி

image

திருவாரூர் மாவட்டம், அதங்குடி பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ்(21) நாகை, தோப்புத்துறையைச் சேர்ந்த தமிழரன் என்பருடன் காருக்குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்வுக்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திருக்குவளை அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியில் மோதி தலை நசுங்கி உயிரிழந்தார். பின்னால் இருந்த தமிழரசன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

News April 8, 2024

திருவாரூர்: இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

image

திருவாரூர், மன்னார்குடி காரிக்கோட்டை அருகே அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், தேவேந்திரன். இருவரும் மன்னார்குடியில் இருந்து பைக்கில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, மேலவாசல் அருகே கட்டுப்பாட்டை இழந்த பைக் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கை ஓட்டிய தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் படுகாயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 8, 2024

கூத்தாநல்லூர் நகராட்சி வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய 2024-25 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத் தொகை பெறலாம் எனவும், பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்த ஏதுவாக நகராட்சி கணிணி வரிவசூல் மையத்திலும் நகராட்சி இணைய தள முகவரியிலும் செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News April 7, 2024

கூத்தாநல்லூர் நகராட்சி வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய 2024-25 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத் தொகை பெறலாம் எனவும், பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்த ஏதுவாக நகராட்சி கணிணி வரிவசூல் மையத்திலும் நகராட்சி இணைய தள முகவரியிலும் செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News April 7, 2024

வைர கிரீடம் அணிந்து ஸ்ரீ ராஜகோபாலன் வீதியுலா

image

வைணவ கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலசுவாமி கோயிலில் பங்குனி மாத விழாவின் பன்னிரெண்டாம் திருநாளான இன்று ஸ்ரீ ராஜகோபாலன் தங்க பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் வைர கிரீடம் அணிந்து கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் சுற்றி, மேலராஜவீதி பந்தலடி வழியாக கோவில் மண்டபம் சென்றடைந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிநெடுக சாமி தரிசனம் செய்தனர்.

News April 7, 2024

திருவாரூர்: பாதுகாப்பு அமைச்சர் வருகை

image

இந்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாகப்பட்டினம் பாராளுமன்ற வேட்பாளர் SGM ரமேஷை ஆதரித்து நாளை (08.04.24) திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகின்றார். இதில் திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட தலைவர் பாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 7, 2024

திருவாரூர்: உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரியுமா?

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள https://affidavit.eci.gov.in/ என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 6, 2024

திருவாரூர்: பாடல் எழுதிய ஆசிரியருக்கு பாராட்டு

image

வரும் ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர் தங்கபாபு எழுதிய “ஊரு ஜனமெல்லாம் கேட்டுக்கோங்க ” என்ற விழிப்புணர்வு பாடல் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டது. இதனையொட்டி இன்று ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆசிரியர் தங்கபாபுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

News April 6, 2024

திருவாரூர்: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான பகுதிகள் நாகை மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் நாகை மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 104 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஏதும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!