India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

திருவாரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு வீதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினர்.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி சனிக்கிழமை அன்று 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு நடைபெற உள்ளது. 18 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 907 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித் துறையும் செய்துள்ளன.

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி சனிக்கிழமை அன்று 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு நடைபெற உள்ளது. 18 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 907 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித் துறையும் செய்துள்ளன.

திருவாரூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <

குடவாசல் அருகே ஒரு அரசு மதுபான கடையில் வேலை பார்ப்பவர் மாறன் (52). இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை, தனது வீட்டுக்குள் அழைத்துள்ளார். அதன்பின் அந்த சிறுமிக்கு மாறன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாறனை கைது செய்துள்ளனர்.

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750-ஐ வழங்க வேண்டும்; ஐகோர்ட்டு தீர்ப்பின் படி 2.57 காரணியால் ஓய்வூதியம் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

குடவாசல் அருகே சுரைக்காயூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 7 வயது சிறுவன் ஒருவன் முடி வெட்ட சென்றுள்ளான். அப்போது சலூன் கடைக்காரரான விஜய் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுவன் தனது தாயாரிடம் கூறியதையடுத்து, போலீசாரிடம் புகார் கொடுத்ததன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் விஜய்யை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.