Thiruvarur

News April 19, 2024

திருவாரூர் கலெக்டர் வாக்களிப்பு

image

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சி விளமல் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளி வாக்கு சாவடி மையத்தில் இன்றைய தினம் நடைபெற்று கொண்டிருக்கும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சாருஸ்ரீ தனது வாக்கை செலுத்தினார்.

News April 19, 2024

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து வாக்களித்தார்

image

இன்று நடைபெற்று வரும் 18 வது பாராளுமன்ற தேர்தலில் மன்னார்குடி தாலுகா கோட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து முதல் நபராக வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அவரை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

News April 18, 2024

நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

திருவாரூர் நாளை வணிக நிறுவனங்கள் இயங்காது.

image

திருவாரூரில் நாளை (19.04.24) வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கினங்க திருவாரூர் நகரத்தில் உள்ள அணைத்து வணிக நிறுவனங்கள் விடுமுறை என்றும், வணிக சங்க தொழிலாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

News April 18, 2024

திருவாரூர் ‘நாங்க Ready! நீங்க Readiya!” மாவட்ட ஆட்சியர்.

image

திருவாரூர் 2024 பாராளுமன்ற தேர்தல் நாளை ( 19.04.24) வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அணைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்ட வாக்காளர்களுக்கு திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாருஸ்ரீ ‘நாங்க Ready! நீங்க Readiys?” . என அழைப்பு விடுத்துள்ளார்.

News April 18, 2024

கால்பந்தாட்ட வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

image

மன்னார்குடியை சேர்ந்த காவியா துருக்கி நாட்டில் நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் பங்கேற்றார். இந்நிலையில், ஊர் திரும்பிய காவியாவிற்கு மன்னார்குடி ரயில் நிலையத்தில் இன்று ஜேசிஐ மன்னை சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கால்பந்தாட்ட வீரர் மார்க்ஸ், ஜே.சி.ஐ மன்னை அமைப்பின் தலைவர வினோத் மற்றும் பலர் மலர் மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News April 17, 2024

திருவாரூர்: “தயாராவோம், வாக்களிப்போம்”

image

திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தயாராவோம் வாக்களிப்போம்” என வாக்களிக்க தேவையான கீழ்க்கண்ட ஆவணங்களை குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, 100 நாள் வேலை அட்டை, மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி புத்தகம், அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை, இதில் ஏதும் இருந்தாலும் வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

image

மன்னார்குடி பகுதியில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் அருள் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒவ்வொருவரும் இந்தியா கூட்டணிக்கு தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வீடு வீடாக சென்று இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 17, 2024

திருவாரூர்: ஈரானில் சிக்கிய வாலிபர்

image

இஸ்ரேல் நாட்டை சோ்ந்த சரக்கு கப்பலை ஈரான் புரட்சிப் படையினா் கடந்த சனிக்கிழமை சிறைபிடித்தனா். இதில் 17 இந்தியா்கள் உள்பட 25 போ் சிக்கியுள்ளனா். இவா்களில் திருவாரூர், மன்னாா்குடி வ.உ.சி. சாலை ரேவதி நகரை சோ்ந்த குணசேகரன்- புனிதா தம்பதியரின் மகன் மரைன் பொறியாளரான தேவதா்ஷன் (21) என்பவரும் ஒருவா். இந்நிலையில் இவரை மீட்க அவரது பெற்றோர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.

News April 17, 2024

திருவாரூர்: விடுமுறை அறிவித்த ஆட்சியர்

image

மக்களவை தேர்தல் ஏப்19ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் (ம) மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135பி-ன் கீழ் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!