India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர், குடவாசல் காவல் நிலைய திருட்டு வழக்கில் தொடர்புடைய சிவராமன் காலனியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் குருவி குருசக்தி (39) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குணம் உடையவர் என்பதால் மாவட்ட எஸ்.பி-யின் பரிந்துரையின் பேரில் குருசக்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கடைவீதியில் உள்ள கடை ஒன்றில் எச்பி மோட்டார் திருடப்பட்டதாக கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு லட்சுமாங்குடி மேல தெருவை சேர்ந்த கண்ணையன் என்பவரது மகன் ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருடப்பட்ட மோட்டாரையும் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவு அலுவலர்களுக்கு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் கிகேட்டோ சேம மற்றும் திருவாருர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனிருந்தனர்.
திருவாரூரில் தற்போது வெயில் வெளுத்து வாங்குவதால், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான வழை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தேர்தல் அலுவலர் சாரு ஸ்ரீ பவித்திரமாணிக்கம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை பொதுமக்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உட்பட பலர் இருந்தனர்.
திருவாரூர் தெற்கு வீதியில் நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அதிமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பொதுக்கூட்டத்தில் பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஓ எஸ் மணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பதட்டமான வாக்கு சாவடி மையங்களை திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருவாரூர், கொல்லுமாங்குடி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாகை வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார். இந்நிலையில் அதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்பணியினை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.
மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.
Sorry, no posts matched your criteria.