India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மூலம் கொள்முதல் செய்யும் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே தமிழக அரசு ஈரப்பதம் சதவீதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வருகின்ற 24ஆம் தேதி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நூலகம், பூங்காக்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தூய்மை பணியினை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகளில் காலை நேர வழிபாட்டு கூட்டத்தின் போது தூய்மை இந்தியா உறுதிமொழி எடுக்க அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “விரைவில் திருவாரூர் மாவட்டம் முதன்மை மாவட்டம் ஆக வாய்ப்புள்ளது. ஒரு பானை சோற்றக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மன்னார்குடியில் மட்டுமே ஆயிரத்து ஐநூறு கோடிக்கு திட்டங்கள் குவிந்துள்ளன. நீடாமங்கலம் மேம்பாலம் போன்ற முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.
கொல்கத்தாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு திருவாரூர் ரயில் நிலையம் அருகில் நேற்று மாலை சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட கன்வீனர் மாலதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 9 மணியளவில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள 18-40 வயதுடைய வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW!
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுகலை பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மேற்கு வங்கத்தின் மாநில அரசு நேர்மையான முறையில் நீதி விசாரணை செய்ய வேண்டும் என திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருத்துறைப்பூண்டி வட்டம், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் மழைநீர் வடிகால் கட்டி மூடப்படாமல் இருந்த நிலையில், இதுகுறித்து நேற்று (ஆகஸ்ட்.18) Way2News செயலியில் செய்தி வெளியாகியது. அதன் எதிரொலியாக இன்று உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் வடிகாலை மூடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மன்னார்குடி டூ மானாமதுரை வரை டெமு ரயில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் முயற்சியில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கடந்த எட்டு மாதங்களாக மானாமதுரை செல்லாமல் காரைக்குடி வரை மட்டுமே செல்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த ரயிலை மீண்டும் மானாமதுரை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர் நல சங்க தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் அருகே இலவங்கார்குடியில் வீட்டில் தனியாக இருந்த பிரபா (40) என்ற பெண்ணை நேற்று கொலை செய்து, நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சென்ற திருவாரூர் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பிரபா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் வாரம்தோறும் திங்கள் கிழமை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று நடைபெறும் கூட்டத்திற்கு வருகை தந்த ஆட்சியர் சாருஸ்ரீ, மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு நேரில் சென்று மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.