Thiruvallur

News October 14, 2024

வன்கொடுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி எண்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் புகார் தொடர்பான முறையீடுகளை கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பயன்பெற 1800 202 1989 மற்றும் 14566 இரண்டு எண்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டுகோள் விடுபட்டது.

News October 14, 2024

திருவள்ளூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளதாவது: ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் அருகில் மக்கள் செல்வது, மரத்தடியில் நிற்பதை தவிர்க்கவும். வாகனம் ஓட்டும் போது கவனமாவும், மெதுவாகவும் செல்லவும். மழையில் செல்வதை தவிர்க்கவும். மின்கம்பங்கள், கம்பிகள், மின் பெட்டிகள் அருகில் செல்ல வேண்டாம். பொதுமக்கள் பத்திரமாகவும், கவனமாகவும் இருக்கும் படி திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 14, 2024

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் 18.10.2024 காலை 10.00 மணிக்கு திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறுகிறது. விவசாயிகளும் தங்கள் குறைகளுக்கு தீர்வுகான கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 14, 2024

TN-ALERT செயலியை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே அதிகாரபூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தற்காத்து கொள்ளவும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவரவர் கைப்பேசி மூலம் அறிந்துகொள்ள TN-ALERT என்னும் செயலியை Google Play Store-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

திருவள்ளூர் MP அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

அக்டோபர் 14 முதல் 17 ம் தேதிவரை வடகிழக்கு பருவமழையினால் திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்துதிருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை,உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது உதவி மைய எண்கள் 044 27660991,மற்றும் 9445500346 ஆகும்

News October 14, 2024

திருவள்ளூர் மாவட்டத்தின் மழை பதிவு விவரம்

image

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 4செ.மீ. கும்மிடிபூண்டி, தாமரைப்பக்கம் தலா 3செ.மீ செங்குன்றம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூரில் தலா 2செ.மீ. மழை பதிவானது. சோழவரம், ஆவடி மற்றும் பூவிருந்தவல்லி பகுதியில் 1 செ.மீ. மழை பதிவானது. மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.

News October 14, 2024

திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்று இரவு முதல் பரவாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் இடையே கேள்வி எழுந்தது. தற்போது, திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 13, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 13, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.

error: Content is protected !!