Thiruvallur

News May 26, 2024

மின்வாரிய அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

image

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்படுதல் மின்தடம் அமைத்தல் பழுதடைந்த மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட தேவைகள் குறித்து நேற்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆய்வு செய்தார். தடையில்லா மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News May 25, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.25) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News May 25, 2024

திருவள்ளூர் அருகே பழங்கள் அழிப்பு

image

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஷ்சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்து அப்பகுதியில் காலி நிலத்தில் புதைத்து அழிக்கப்பட்டது. நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் உடன் இருந்தார்.

News May 25, 2024

திருவள்ளூர் அருகே புத்த பூர்ணிமா கொண்டாட்டம்

image

திரிசரணம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு தலைமையில் புத்த ஜெயந்தி நேற்று முன்தினம் (மே 23) கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன், கோட்டாட்சியர் தீபா ஆகியோரும், தலித் மக்கள் முன்னணியினரும் சேர்ந்து புத்தரை வழிபட்டனர். புத்தரின் போதனைகள், பஞ்ச சீலம் குறித்து ஆசிரியர் ஜெய்சங்கர் பேசினர். பரசுராமன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

News May 24, 2024

பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த 8 பேருக்கு ஜாமீன் ரத்து

image

சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக இருந்த குற்றச்சாட்டு காரணமாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பைச் சேர்ந்த 8 பேரின் உயர் நீதிமன்ற நிபந்தனை ஜாமீனை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து 8 பேரும் சென்னையில் உள்ள ஐ.என்.ஏ அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை ஐ.என்.ஏ அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

News May 24, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News May 24, 2024

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 52 வாகனங்கள் நீக்கம்

image

செங்குன்றம், கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 265 தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. ஆய்வில் 52 பள்ளி பேருந்துகள் இருக்கை, தீயணைப்பான், அவசர கதவு செயல்பாடின்மை, கேமரா உட்பட பல்வேறு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி இல்லாத வாகனங்கள் இயங்க கூடாது என போக்குவரத்து ஆய்வாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

உலக அளவில் கைப்பந்து போட்டி: தமிழக காவலர்கள் சாதனை

image

ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படை 13வது அணியில் பணியாற்றிவரும் தலைமை காவலர் கண்ணன், காவலர் கபில் கண்ணன் ஆகிய இருவரும் காவல்துறை விளையாட்டு அணியில் கைப்பந்து வீரராக, உலகளவில் தற்போது நடைபெறும் கைப்பந்து போட்டியில் இந்திய அணியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடக்கும் போட்டியில் இந்திய அணி, கஜகஸ்தான் அணியை நேற்று வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது.

News May 24, 2024

திருவள்ளூர் அருகே பௌர்ணமி பூஜை: திரண்ட பக்தர்கள்

image

ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பொன்னியம்மன் கோவிலில் நேற்று பௌர்ணமி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு பௌர்ணமி தீபாரதனையுடன் அம்மனுக்கு சிறப்பு ஆலாபனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News May 23, 2024

திருத்தணி கோயிலில் டிஆர்டிஒ செயலாளர் சாமி தரிசனம்

image

திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும் இந்த திருத்தலத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை டி ஆர் டி ஒ செயலாளர் சதீஷ் ரெட்டி இன்று நண்பகல் முருகன் கோவிலுக்கு வந்தார். பின்னர் உற்சவர் சண்முகர் ,முருகர் ,மூலவர் முருகர் வள்ளி தெய்வானை சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அப்போது அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.