India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒன்றியத்திற்கு தலா 100 பயனாளிகள் வீதம் கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டு கோழி குஞ்சுகள் ஒருவருக்கு 40 கோழிக்குஞ்சுகள் 50 % மானியத்தில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அணுகி கேட்டுக் கொள்ள வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தின் ஏரிகளின் இன்று காலை 6 மணி வரை நிலவரத்தை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று மழை குறைந்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக குறைந்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரண முகாம் நடைபெற்று வரும் 38 பள்ளிகளை தவிர்த்து மற்ற அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் ஆணையின்படி நிவாரண முகாம் நடைபெறும் பள்ளிகள் மட்டும் இன்று செயல்படாது மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முழுவேலை நாள் என தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 221 கர்ப்பிணி தாய்மார்களை அடுத்த 3 வாரங்களில் பிரசவம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படும்கண்டறிந்து அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தங்க வைத்து தொடர் கண்காணிக்க பட்டுவந்தனர் இவற்றில்
இதுவரையிலும் 62 தாய்மார்கள் பிரசிவித்துள்ளார்கள் என ஆட்சியர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நேற்று மழை பெய்யாததால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ரெட் அலர்ட்டும் விடுத்துள்ளது.
திருநின்றவூர் பகுதியில் உள்ள ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 100 பேரை நேரில் சந்தித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். உடன் அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.