Thiruvallur

News October 25, 2024

திருவள்ளூர் எம்.பி. எச்சரிக்கை

image

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: RSS அமைப்பின் மாணவர் பிரிவான ABVP தலைவர் சவீதா ராஜேஷை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக ஆளுநர் ஆர்என் ரவி நியமித்திருப்பதன் மூலம் கல்வி கூடத்தை காவிக் கூடமாக்கி மாணவர்கள் மத்தியில் சாதி மத கலவரங்களை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இந்த நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என எச்சரித்துள்ளார்.

News October 25, 2024

சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் சென்னை லஞ்ச ஒழிப்–புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. இதனையடுத்து பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 2 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர்.

News October 25, 2024

பூந்தமல்லி நகராட்சியில் ரூ.2 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல்

image

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சோதனையை துவங்கி நேற்று அதிகாலை 3 மணிக்கு முடித்தனர். இதில், கணக்கில் வராத ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நகராட்சி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 24, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 24, 2024

திருவள்ளூரில் அக்.29ஆம் தேதி வரை மழை

image

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த டானா புயல், நாளை (அக்.25) காலை ஒடிசா, மேற்குவங்கம் இடையே புரி- சாகர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று (அக்.24) திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அக்.29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது

News October 24, 2024

ரூ.16 லட்சத்து 26 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

image

திருத்தணி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (49) கடந்த 2020-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ராஜலட்சுமியின் கணவர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. அப்போது இருசக்கர வாகன உரிமையாளரும் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.16 லட்சத்து 26 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

News October 24, 2024

திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பல நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களிடம் யாரேனும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அதற்கு முன் பணம் செலுத்தும்படி தெரிவித்தால் உடனடியாக அந்நபரை குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.

News October 23, 2024

பூந்தமல்லி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி நகராட்சி அமைந்துள்ளது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் பணம் கை மாறுவதாக வந்த தகவலையடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை குழுவினர் அடங்கிய 15 போலீசார் இன்று மாலை முதல் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அலுவலகத்தின் நுழைவு கேட்டை மூடி விட்டு யாரும் உள்ளே வந்து செல்லாத வகையில் சோதனை நடக்கிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News October 23, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணி அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 23, 2024

குழந்தைகளை தத்து எடுப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

திருவள்ளூரில் ஆதரவற்ற குழந்தைகளை குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்யும் பெற்றோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் சொந்த குழந்தைகள் இருந்தாலோ அல்லது தத்து எடுப்பதற்கு உரிய தகுதிகள் இருந்து பதிவு செய்து காத்திருப்பவர்களாக இருந்தாலோ, குழந்தை இல்லாதவர்கள் நடைமுறைகளை பின்பற்றி வளர்ப்பு பராமரிப்பில் குழந்தைகளை வளர்க்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!