India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது, அதிகபட்சமாக. திருத்தணியில் 23 மி.மீ. மழை, செங்குன்றத்தில் 19மி.மீ. மழை, பூண்டியில் 9.2மி.மீ. ஊத்துக்கோட்டையில் 9 மி.மீ சோழவரத்தில் 5மி.மீ, ஜமீன் கொரட்டூர் மற்றும் ஆவடி தலா 2 மிமீ. மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையான இன்று 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே திருவள்ளூரில் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட திருவள்ளூர் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் மாலை 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த கனமழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 37மி.மீ, ஊத்துக்கோட்டையில் 14 மி.மீ., தாமரைப்பக்கம் 9.8மி.மீ., பொன்னேரியில் 6 மி.மீ மழை பதிவானது. தாமரைப்பக்கம் 9.8மி.மீ, , திருவள்ளூர் 2 மி.மீ. சோழவரத்தில் 1மி.மீ, மழை பதிவாகியுள்ளது. பதிவானது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் சி பிரிவில் உள்ள நபர்களுக்கும் இன்று முதல் அடுத்த மாதம் 20-ந்தேதி வரை மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஒன்றியம் வாரியாக நடைபெற உள்ளது. என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.