India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் 40 அரங்கு வரை உள்ளடக்கிய விற்பனை கண்காட்சி நவ.15 முதல் நவ.24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இக்கண்காட்சியில் பங்குபெற விருப்பமுடைய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது விற்பனை பொருட்கள் பற்றிய விவரத்தினை மேலாளர், மாவட்ட இயக்க மேலாண்மை எண்.04427664528, 9176099966 தொடர்பு கொண்டு விண்ணப்படிவத்தினை பெற்று நவ.14 முன்பு பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணுவாக்கம் ஊராட்சி மன்ற செயலராக உள்ள தசுருதின் என்பவர் குட்கா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். சொந்த ஊரில் அவர் மளிகைக் கடை நடத்தி வரும் நிலையில், கடையில் விற்பதற்காக குட்கா எடுத்துவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, விஷ்ணுவாக்கம் ஊராட்சி மன்ற செயலராக உள்ள தசுருதீனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லியில் உள்ள தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வராஜ் (50) என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் பாதுகாப்புடன் செல்வராஜுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளையும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவ.01 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டமானது நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நவ.23 ஆம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 418 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.