India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் உங்கள் கடவுச்சொல், OTP, PINs CUV விவரங்கள் போன்றவற்றைக் கோரி எந்த வங்கியும் அல்லது அதன் ஊழியர்களும் உங்களை அழைக்கவோ அல்லது மின்னஞ்சல் அனுப்பவோ மாட்டார்கள். அப்படி அழைப்பு வந்தால் உடனடியாக உங்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரடியாக சென்று புகார் அளிக்கவும் என தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
பொன்னேரி தேரடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். மட்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளியான இவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் ரூ.10,000 ரொக்கம் மயமாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பொறியாளர்கள், அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். <
திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி, அரசு பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக் கொண்டு நேற்று (பிப்.2) சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, பின்னால் பேனர்கள் ஏற்றி வந்த, டிராக்டர் பேருந்தை முந்தி சென்றது. அப்போது, பேருந்தின் முன்பக்க கண்ணாடியில், டிராக்டர் மோதியது. இதில், கண்ணாடி முழுதும் உடைந்ததில் ஒரு பயணிக்கு படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.
பட்டாபிராமைச் சேர்ந்த ரித்திஷ் (21), நசரத்பேட்டையைச் சேர்ந்த திருமலை (20) ஆகியோர் நேற்று (பிப்.2) காலை ஆந்திராவில் உள்ள தடா நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் புறப்பட்டனர். வண்டலுார் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது, செங்குன்றம் அருகே ரித்திஷ், திருமலை சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இதில், ரித்திஷ் பரிதாபமாக உயிரிழந்தார். திருமலை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதி (35) மின் ஊழியர். இவரது அக்கா மகன் விமல் (15), மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் பைக்கில் வில்லிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த போது மீஞ்சூர் அடுத்த வல்லூர் சாலையில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானர். இதுகுறித்து செங்குன்ற்றம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (பிப்.2) ஒரே நாளில் சுமார் 70 திருமணங்கள் நடைபெற்றது. இதனால், மலைக்கோயில் மக்கள் வெள்ளத்தில் திருக்கோயில் நிறைந்திருந்தது. இந்த மாதத்தில் திருமணம் செய்தால் நல்லது என்று சாஸ்திரங்களால் சொல்லப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால், நிறைய பேர் இந்த சுபமுகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தினர்.
பள்ளிக் கல்வித்துறை, அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்தி வருகிறது. அந்த வகையில், இரு மாதங்களாக நடந்த போட்டிகளில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 298 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், தெருக்கூத்து போட்டியில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்தனர். அவர்களுக்கு நேற்று (பிப்.1) திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.
மீஞ்சூர் அருகே உள்ள புங்கம்பேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு (62). பார்வை குறைபாடு உள்ள இவர் தனது மனைவி உமாவுடன் (55) வசித்து வந்தார். இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இருவரையும் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால், மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் நேற்று முன்தினம் (ஜன.31) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். உடல்களை கைப்பற்றிய மீஞ்சூர் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.