Thiruvallur

News December 18, 2024

திருவள்ளூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச.17) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதையடுத்து, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 17, 2024

ஓவியங்களைப் பார்வையிட்ட ஆட்சியர்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திருவள்ளூர் மற்றும் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு சார்ந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களிடம் தாங்கள் பங்குப் பெற்ற போட்டிகளின் சிறப்பு அம்சங்களை கேட்டறிந்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார்.

News December 17, 2024

சபரிமலைக்கு சென்ற இளைஞர் மரணம்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி சம்பத் என்பவரின் மகன் ஜெகன்(32). இவருக்கு மனைவி மற்றும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெகன் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்வது போல இந்த ஆண்டும் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெகன் சபரிமலையில் மேலே நடந்து சென்ற போது திடீர் மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆரம்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

News December 17, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 465 மனுக்கள்

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 465 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

News December 17, 2024

திருவள்ளூரில் கனமழை பெய்யும்

image

தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.

News December 16, 2024

திருவள்ளூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

வரும் 20.12.2024 வெள்ளிக்கிழமை அன்று திருவள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 16, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 465 மனுக்கள்

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 465 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

News December 16, 2024

திருவள்ளூரில் மிக கனமழை பெய்யும்

image

தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கனமழையும் மற்றும் டிச.,18ஆம் தேதி மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.

News December 16, 2024

580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில், ஆவடி முதல் ஆரணி வரை இருந்த 580 பேருந்து வழித்தடத்தை, புதுவாயல் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தை இன்று அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். உடன் கோவிந்தராஜன் எம்.எல்.ஏ, துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News December 16, 2024

திருவள்ளூர் அருகே 6 பேர் கைது 

image

திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் மற்றும் மெய்யூர் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு டாஸ்மாக் கடையில் துளையிட்டு 5.5லட்சம் ரூபாய் மதிப்பிலான 2700 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வெங்கல் மற்றும் பெரியபாளையம் போலீசார் பிரபாகரன், வீரமணி, முத்து, ஸ்டீபன், இசக்கிமுத்து, தர்மேந்தர் ஆகிய 6 பேரை கைது செய்து 2700 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!