India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன், மாநில தீவனம் அபிவிருத்தி திட்டம், 2024 – 25ம் ஆண்டின் கீழ் பசுத்தீவனம் பயிரிடுவதற்கு வருவாய் கோட்டத்தில் மானாவாரி சாகுபடியில், 70 ஏக்கர், நஞ்சை சாகுபடியில், 40 ஏக்கர் என மொத்தம் 110 ஏக்கரில் சோளம் மற்றும் காராமணி தீவன விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு திருநின்றவூரை ஜெயா அறிவியல் கலைக் கல்லூரியிலும், பள்ளி மாணவர்களுக்கு டி.ஆர்.பி.சி., இந்து மேல்நிலைப் பள்ளியிலும் வரும் 24ஆம் தேதி போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் பரிசு ரூ.10,000, 2ஆம் பரிசு ரூ.7,000, 3ஆம் பரிசு ரூ.5,000ஆகும்.
திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவமனை, கிளினிக்குகளில், சுவாச பிரச்னையால் தினமும் பல குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். நிமோனியா பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளால், நுரையீரல் திசுக்களில் ஏற்படும் தொற்று தற்போது தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக, டெங்கு, கொரோனா, டைப்பாய்டு, மலேரியாவால் பாதிக்கப்பட்டோருக்கு, நிமோனியா பாதித்தால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்
குளிர்காலம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சல், சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவில் வறட்டு இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் வலி, தொண்டை வலி, வறட்டு இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் மேலக்கொண்டையாரில் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான செங்கல் தொழிற்சாலையில் வாந்தி, பேதி ஏற்பட்டு 4 மாத ஆண் குழந்தை உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத, சுகாதாரமற்ற கூடாரத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் ஜன.26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா். இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதிசெலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருத்தணி அடுத்த சந்தான கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ், திருத்தணியில் உள்ள வங்கியில் கடன் தொகையை செலுத்த வந்தார். அப்போது அவர்கையில் வைத்து இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்து ரூ.92 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்துள்ளனர். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின்பேரில், திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (20.01.2025) மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் 354 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.