Thiruvallur

News April 6, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10:00 மணி முதல் இன்று (ஏப்.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 5, 2026

திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News April 5, 2026

திருவள்ளூர்: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 5, 2026

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருவள்ளூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம.1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 5, 2026

திருவள்ளூர் : டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

திருவள்ளூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News April 5, 2026

திருவள்ளூர் : டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

திருவள்ளூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News April 5, 2026

திருவள்ளூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் அன்புமணி ராமதாஸ்!

image

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி P.V.ரமணா,பொன்னேரி சட்டமன்றத் தொகுதி P.பலராமன், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி V.சுதாகர் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும், ஆவடி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மன் மகேந்திரா தாமரை சின்னத்திலும் நேற்று (ஏப்.04) வாக்கு சேகரித்தார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்து கொணடனர்.

News April 5, 2026

திருவள்ளூரில் வாலிபர் பரிதாப பலி!

image

செவ்வாப்பேட்டை அருகே திருவூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 24).இவர் நேற்று குடும்பத்தினருடன் கூவம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றார்.அப்போது ஆற்றில் மீன்பிடிக்க போட்டிருந்த வலையில் பாபுவின் கால் சிக்கி நீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிசோதனையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2026

திருவள்ளூர்: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

திருவள்ளூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 4, 2026

திருவள்ளூரில் 250 கோழிகள் இலவசம்!

image

திருவள்ளூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!