India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடம்பத்தூர், பிஞ்சிவாக்கம் காலனியைச் சேர்ந்த கன்னியப்பன் (60), கடந்த 14ம் தேதி திருப்பதிக்கு செல்கிறேன் என கூறி சப்பார் ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அங்கு தவறி விழுந்ததில் நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளனர். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த <
திருவள்ளூர் மாவட்டம் வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (65). திமுக நிர்வாகியான இவர் அண்மையில் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஏற்பட்ட மன வருத்தமே இதற்கு காரணம். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த செல்லமுத்து (25) – பிரியா (22) தம்பதியர் 8 மாத பெண் குழந்தையுடன் மப்பேடு அருகே உள்ள செங்கல்சூளையில் பணிபுரிந்து வந்தனா். கடந்த 13ஆம் தேதி இருவரும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, கோணிப்பையில் தங்களது மகளை படுக்க வைத்திருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த போா்க்லிப்ட் வாகனம் சாக்குப்பையில் படுத்திருந்த குழந்தையின் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.
திருவள்ளூர் அருகே உள்ளது புட்லூர் அங்காள பரமேசுவரியம்மன் கோவில் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பிறகும் இதனால் செய்வகிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் பலர் அங்காள பரமேசுவரியம்மனை வழிபடுவர். ஷேர் பண்ணுங்க.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் வயது 33 மனைவியின் அஸ்வினி 32. கார்த்திக் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை வருகிறார். இந்த நிலையில் வீட்டில் மின் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்திய போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி (32). இவர் இன்று (மார்.15) காலை குளிப்பதற்காக வாளியில் ஹீட்டர் போட்டுள்ளார். தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்த்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தாட்கோ கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகளை விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். எனவே, இடைத்தரகர்கள் உங்களை அணுகினால் அவர்களை தவிர்ப்பதுடன், அவர்கள் கேட்கும் பணத்தை வழங்க வேண்டாம். அவ்வாறு அணுகும் இடைத்தரகர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் அனைவரும் அக்னிவீரர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக வரும் ஏப்.10ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு, 044-25674924 எண்ணில் அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.