Thiruvallur

News May 30, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மே 30 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News May 30, 2024

மனைவியை கொலை செய்த கணவர் கைது

image

எண்ணூர், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (30). இவரது மனைவி ராஜலெட்சுமி (25). நேற்று தம்பதிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கத்தியால் ராஜலட்சுமியை குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை இன்று கைது செய்தனர்.

News May 30, 2024

ஆவடி: புதிய எல்.இ.டி மின் விளக்குகள் அமைப்பு

image

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 41-வது வார்டில் பழுதடைந்த மின்விளக்குகளை மாற்றிவிட்டு, புதிய மின் விளக்குகள் அமைக்க கோரி கவுன்சிலர் சாந்தி பாண்டியன் மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று புதிய எல்.இ.டி மின் விளக்குகள் மாற்றும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக கவுன்சிலர் சாந்தி பாண்டியனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News May 30, 2024

சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

இந்திய அரசு நீர், நிலம், ஆகாயத்தில், சாகச விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே’ விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ஆம் தேதிக்குள் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News May 30, 2024

திருவள்ளூர்: போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது

image

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த தயாளன், மோனிஷ் குமார் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த யுவராஜ், மோகன் ஆகிய 4 பேரும் மும்பையிலிருந்து ரயில் மூலம் போதை மாத்திரை கடத்தி வந்தனர். திருத்தணியில் இறங்கி சென்னைக்கு பேருந்து மூலம் கடத்த காத்திருந்தனர். அப்போது அங்கே சென்ற போலீசார் அவர்களைப் பிடித்து சோதனையிட்டதில் அவர்களிடம் போதை மாத்திரை இருப்பதை கண்டுபிடித்து 4 பேரையும் கைதுசெய்தனர்.

News May 29, 2024

திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோயில் சிறப்பு!

image

திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ சுவாமி கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஐந்தடுக்கு ராஜ கோபுரமுடைய இத்தலத்தில் 9 ஆம் நூற்றாண்டின் பல்லவ வம்சத்தைச் சேந்த கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் வைத்திய வீரராகவ கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலினுள் சிறுசிறு சன்னதிகள் பல உள்ளன. இக்கோயிலின் விமானம் விஜயகோடி விமானம் ஆகும்.

News May 29, 2024

பொன்னேரி: லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் பலி

image

பொன்னேரி அருகே சோழவரம், செம்புலிவரம் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் இன்று, கண்டெய்னர் லாரி ஒன்றை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த் ரபிகர்மான் (31) என்ற ஓட்டுநர் சாலையோரமாக நிறுத்த முயன்றார். அப்போது மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பில் லாரி உரசியதில் டயர் தீப்பற்றி எரிந்தது. இதனை ஓட்டுநர் ரபிகர்மான் அணைக்க முயன்ற போது தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 29, 2024

திருவள்ளூரில் கால்பந்து: பிரபலம் தொடங்கி வைப்பு

image

திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை ஊராட்சியில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் முதலாண்டு ஒரு நாள் ஐவர் கால்பந்து போட்டியை மையத்தின் நிறுவனரும், திரைப்பட இயக்குநருமான பா.ரஞ்சித் நேற்று தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் ஊராட்சித்தலைவர் டெய்சிராணி அன்பு, மணிவண்ணன், குமார், தேவா, வெற்றி, ஆமோஸ், சதீஷ், அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News May 29, 2024

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணுமிடத்தில் வேட்பாளர்கள், முகவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் முகவர்கள் கைப்பேசி கொண்டு வரக்கூடாது. முகவர்கள் அந்த அறையைத் தவிர வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணும் அறைக்குள் செல்லக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.

News May 29, 2024

திருவள்ளூர்: ஆவின் பால் மாயம்

image

ஆவடி அருகே பட்டாபிராம் காவல் நிலையம் அருகே அனைத்து மகளிர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் நடத்தி வருபவர் மலர்விழி (58) . நேற்று அதிகாலை வழக்கம்போல் பிளாஸ்டிக் டிரேயில் ஆவின் பால் பாக்கெட்டுகள், இவரது சங்கம் அருகே இறக்கி வைக்கப்பட்டுள்ளன. காலை மலர்விழி கடைக்கு சென்று பார்த்தபோது 4 டிரேயில் இருந்த 50 ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் திருடு போயிருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!