Thiruvallur

News May 3, 2024

திருவள்ளூர் தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு!

image

திருவெற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகரஜசுவாமி கோவில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற தலமாகும். 7 அடுக்கு நுழைவாயில் கோபுரத்துடன் 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றானது இத்தலம் தொண்டைமண்டலத்தின் முக்கோண கோயிலில் ஒன்று. இங்கு கிடைத்த பல்லவர் கால கல்வெட்டுகள் இக்கோயிலின் வரலாற்றை பறைசாற்றுகின்றன.

News May 3, 2024

திருவள்ளூர் ஆட்சியரிடம் வாழ்த்து

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2023-24ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷோபாவை பாராட்டி தமிழக அரசு சார்பில் உயர்கல்வி வழிகாட்டி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை ஷோபா நேற்று திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

News May 2, 2024

திருவள்ளூர் ஆட்சியரிடம் வாழ்த்து

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷோபா அவர்களை பாராட்டி உயர்கல்வி வழிகாட்டி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

News May 2, 2024

திருவள்ளூர் அருகே ஆட்சியர் ஆய்வு

image

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் இன்று (02.05.2024 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்களும் உடனிருந்தனர்.

News May 2, 2024

இறந்த மூதாட்டி உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்

image

பொன்னேரியை அடுத்த சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால். இவரது தாயார் முத்தம்மாள் (72), வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது விருப்பத்தின்படி, அவரது உடல் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக மாணவர்களின் ஆய்விற்கு பயன்படுத்திக் கொள்ள அனுப்பிவைக்கப்பட்டது.

News May 2, 2024

ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் மாயம்

image

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஏரியில் தனியார் கல்லூரி இன்ஜினியரிங் மாணவர் கரண் (21) தனது நண்பர்களுடன் நேற்று ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கரண் சிறிது நேரத்தில் மாயமானார். நண்பர்கள் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் பொன்னேரி தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய கரணை தேடி வருகின்றனர்.

News May 2, 2024

திருவள்ளூர் அருகே ரத யாத்திரை

image

வடசென்னை, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கவுர நிதாய் ரத யாத்திரை திருநின்றவூரில் நேற்று இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த ரத யாத்திரையை சிடிஎச் சாலையில் திருநின்றவூர் நகராட்சித்தலைவர் உஷாராணி ரவி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரதம் திருநின்றவூர் மேம்பாலம், பெரியபாளையம் சாலை, கோமதிபுரம் பிரதான சாலை, கோமதிபுரம் 3வது குறுக்குத் தெரு வழியாகச் சென்று திருநின்றவூர் இஸ்கானை அடைந்தது.

News May 1, 2024

மாவட்ட நிர்வாகம் சார்பாக உணவு வழங்கல்

image

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இன்று “தொழிலாளர் தினத்தை” முன்னிட்டு தேர்தல் பணி மேற்கொள்ளும் காவல்துறையினர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக துறை சார்ந்த அலுவலர்களால் உணவு வழங்கப்பட்டது.

News May 1, 2024

தந்தையின் சொத்துக்களை அபகரித்த மகன்: கண்ணீர் மல்க மனு

image

திருவள்ளூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (76). இவருக்கு பாலாஜி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். ரகுநாதனின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். பாலாஜி தனது தந்தை ராகுநாதனின் சொத்துக்களை பறித்து கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றி பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரகுநாதன் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தார்.

News May 1, 2024

அரசு சார்பில் சிறுமிக்கு வீடு கட்டும் பணி: எம்எல்ஏ ஆய்வு

image

ஆவடி அருகே மோரையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் குணமடைந்தார். இவருக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டு, வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியை ஆவடி தொகுதி எம்எல்ஏ சா.மு.நாசர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!