India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்தணி அருகே பொன்பாடி பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகள் ரஞ்சனி (17). இவர் திருத்தணியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பிஏ படித்து வந்தார். இந்த நிலையில் ரஞ்சனி நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் ரஞ்சனி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே நத்தமேடு ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் நேற்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் பெயரில் வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நிலங்களை மீட்கும் வகையில் பதாகைகளை வைத்துள்ளார். மேலும் ஆக்கிரமிப்பு உள்ள இடங்களை மீட்கப்படும் எனத் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ளது ஐந்தாம் படை வீடான முருகன் கோவில். இந்த கோவிலுக்கு ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த மூன்று வாரங்களில் பக்தர்கள் காணிக்கையை செலுத்தப்பட்ட பணம் நேற்று எண்ணப்பட்டது. இதில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
திருவள்ளூர் அருகே திருமழிசை பேருராட்சித் தலைவர் வடிவேலு (62) (திமுக). இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி இவர், தனது உறவினர் மூர்த்தியுடன் காரில் மண்ணூர் கூட்டுச்சாலையில் சென்ற போது, சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த வடிவேலு போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் வியாபாரிகள் தங்களது கடை முன் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இன்று காலை ஊத்துக்கோட்டை போலீசார் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூர் அருகே வெங்கத்தூர் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணவன் அரவிந்த்(15). இவர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவரது தாய் கண்டித்துள்ளார். இதையடுத்து அரவிந்த் வீட்டில் இருந்து தலைமறைவானார். புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மாயமான மாணவன் அரவிந்தை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (19), பூவிழி (19) ஆகியோர் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்துள்ளனர். இதற்கிடையில் பூவிழிக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்த நிலையில், அவர் சந்தோஷுடன் திருவள்ளூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு எஸ்.பி அலுவலகத்தில் நேற்று இருவரும் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி பூவிழியை, சந்தோஷுடன் அனுப்பி வைத்தனர்.
புழல் அருகே புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (48). இவருக்கு விநாயகபுரத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்து அவரது மகன் குப்புசாமி நேற்று கோவிந்தனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி பற்களை உடைத்துள்ளார். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.