India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.22) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பூந்தமல்லி அருகே கொளுத்துவாஞ்சேரி பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம் சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (69) என்பவருக்குச் சொந்தமானது. இவரது நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, போரூர் பகுதியைச் சேர்ந்த ராஜி என்ற குணசேகரன் (63) என்பவரை நேற்று கைதுசெய்தனர்.
வங்கனூர் சின்ன குளக்கரையில் அமைந்துள்ளது ஆத்ம லிங்கேஸ்வரர் கோவில். நிறைமாத கர்ப்பிணிகள் இங்குள்ள நந்தியம் பெருமானின் சிலையை திருப்பி வைத்தால், சுகப்பிரசவம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறப்புமிக்க இந்தக் கோவிலுக்கு, அரக்கோணத்தைச் சேர்ந்த தங்க நகைக்கூடம் சார்பில் மணிக்காட்டி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு கோவிலின் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
அம்பத்தூரில் அரசினர் ஐ.டி.ஐ-யில் கடந்த 10ஆம் தேதி முதல் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி வரை சேர்க்க விண்ணப்பம் ஆன்லைன் பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.50ம், நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் இன்று தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே வெங்கத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி தினேஷ் (27). கடந்த 18ஆம் தேதி இவர் மனைவியுடன் வெங்கத்தூர் அருகே வந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் முன் விரோதம் காரணமாக தினேஷை கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். புகாரின்பேரில் மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜனார்த்தனம் (20), சாலமன் (27), ஜான் விக்டர் (27) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்
மீஞ்சூர் அரியன் வாயல் அம்மா செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் வசந்த்-வள்ளி. இவர்களின் குழந்தை கீர்த்தனா (2) வீட்டின் அருகில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. மீஞ்சூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்று முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பூந்தமல்லி அருகே திருமழிசையைச் சேர்ந்தவர் பாபு (49), தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களது மகன் தமிழரசன் (24). நேற்றிரவு பாபு வேலை முடித்து குடிபோதையில் வீட்டுக்கு வந்ததை, மனைவி தேவி கண்டித்துள்ளார். அப்போது பாபு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால், கோபம் அடைந்த மகன் தமிழரசன் கத்தியால் பாபுவை குத்திக் கொலை செய்தார். வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிந்து தமிழரசனை இன்று காலை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பூந்தமல்லி அருகே ராமாபுரம் பிரதான சாலையில் நடந்துசென்ற வாலிபரிடம் மர்ம நபர் கத்தியை காட்டி பணத்தை பறித்துச் சென்றார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ராமாபுரம், ஆண்டவன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (44) என்பவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் அகோபில மடம் வசந்த மண்டபத்தில் ஐந்தாம் நாளாக நேற்று எழுந்தருளினார். திருமஞ்சனத்தைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நுங்கு தோரணங்கள் வாயிலில் தொங்கவிடப்பட்டிருந்தது கோடை வசந்த விழாவின் சிறப்பு அம்சம் ஆகும். குதிரை வாகனத்தில் உற்சவர் பெருமான் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.