Thiruvallur

News January 29, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (28.01.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News January 29, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (28.01.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News January 28, 2026

திருவள்ளூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 28, 2026

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூரில் தனியார் மற்றும் பொதுத் துறை இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மகளிர் உதவிக்காக வழக்கு பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். வயது 18-40 வயது வரை இருக்கலாம். கல்வி தகுதி மற்றும் விண்ணப்படிவத்திற்கு இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்யது (பிப்.2)க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதீப் தெரிவித்தார். ஷேர் IT

News January 28, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் டிச.30ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் குறைகளை விவசாயிகள் நேரடியாக முன்வைக்கலாம். எனவே, இக்கூட்டத்தில் அனைத்து விவசாயப் பெருமக்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 28, 2026

திருவள்ளூரில் மாதம் ரூ.7,000! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.7000 சம்பாதிக்க ஓர் அரிய வாய்ப்பு. ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையின் மூலம் கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. (SHARE IT)

News January 28, 2026

திருவள்ளூர்: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

image

திருவள்ளூர் மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )

News January 28, 2026

திருவள்ளூர்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

திருவள்ளூரில் அதிரடி கைது!

image

மணவாளநகர்போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மணவாளநகர் போலீசார் பட்டரைப் பகுதியில் அதிரடி சோதனை செய்தனர். இதில், ராமதாஸ் தெருவைச் சேர்ந்த ஏழுமலையிடம்(54) 128 கிலோ குட்கா, வெங்கடேசன்(47) என்பவரிடம் 128 கிலோ குட்கா என பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News January 28, 2026

திருவள்ளூரில் நாளை பவர் கட்!

image

ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.29) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஊத்துக்கோட்டை, தாரட்சி, போந்தவாக்கம், அனந்தேரி, மாம்பாக்கம், மாமண்டூர், வேலகாபுரம், வேலகமகண்டிகை, பென்னலூர்பேட்டை, காசிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!