India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
FEDEX கொரியரில் இருந்து உங்களது பெயரில் பார்சல் அனுப்பி இருப்பதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதாகவும் கூறி உங்களை காவல் துறையிடம் இணைப்பதாக கூறுவர். பின்பு காவல் அதிகாரி என பேசும் நபர் உங்கள் மீது FIR பதிவு செய்து இருப்பதாக மிரட்டி உங்களிடம் இருந்து வங்கி விவரங்கள், பணத்தை கேட்டு மிரட்டுவர். இது போன்ற அழைப்புகளை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புழல் காமராஜர் திருமண மண்டபத்தில் செப் 29 ஆம் தேதி தமிழக சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தலைவர் சந்தனகுமார் தலைமையில் அறிவிக்கப்படவுள்ளது. இவர் ஏற்கனவே சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார் .தற்போது தனியாக கட்சி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஜவர்கலால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி அக்:9.10.2024 அன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் பேச்சுப் போட்டிகள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் வாயிலாக நடைபெற உள்ளது. பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி பயிலுகின்ற மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் தகவல்
திருவேற்காடு பிரியாணி கடைக்கு சென்ற சிறுமியிடம் கடையில் பணிபுரியும் புரியும் மதன்குமார் என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை உறவினர் ஒருவர் தட்டி கேட்க சென்ற போது மதன் குமாரும் அவருடைய நண்பர் கிஷோர் குமார் இருவரும் தாக்கியுள்ளனர். இது குறித்து இருவேறு புகார்கள் கொடுக்கப்பட்டது. இதில் மதன் குமார் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார். கிஷோர் குமார் உறவினரை தாக்கியதற்காக கைது செய்யபட்டார்.
புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாங்காடு பாக்கம் மற்றும் சென்ற பாக்கம் ஊராட்சிகளில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் ஒன்றிய ஆணையர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் டி கிருஷ்ணகுமார், பி பி பாலாஜி ஆகியோர் விசாரித்து இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூரில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. வைத்திய வீரராகவ பெருமாள் சமேதராக ஸ்ரீதேவி, பூதேவி உடன் காட்சியளிக்கும் இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமிக்கு துளசி மாலை வழங்கி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூரில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.