India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-வது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16-ம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பில் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 12 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்ததாக லோகேஷ் (25) என்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். முகாமில் போதிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருத்தணி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் Al, Food & Beverage, Apparel Designing, Cosmetology உள்ளிட்ட துறைகளில் இலவச திறன் பயிற்சி மூன்று மாதங்கள் வழங்கப்படுகிறது. 18-40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26 கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உத்தேச ஒதுக்கீடு , திட்ட செயலாக்கத்தின்படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியலை ஒப்புதல் பெறும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் வரும் 17ஆம்தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில் சலீம்(32). இவருக்கு, சீதா(27) என்ற மனைவியும், விதிசா என்ற 9 மாத குழந்தையும் உள்ளனர். கனகம்மாசத்திரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று(பிப்.11) பசியால் அழுத குழந்தைக்கு, தாய் சீதா தாய்ப்பால் கொடுத்தார். அப்போது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.