Thiruvallur

News February 11, 2026

கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இன்று (பிப்.10) தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது‌. இதில் 150-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி
மாணவிகள் கலந்துக்கொண்ட ஸ்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை பேரணியை ஆட்சியர் பிரதாப், கொடியசைத்து துவக்கி வைந்தார்.

News February 11, 2026

புத்தக திருவிழா கண்காட்சி லட்சினை வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் BAPASI இணைந்து வழங்கும் புத்தக திருவிழா கண்காட்சி லட்சினை வெளியிட்டு விழா இன்று பிப்.10 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்று புத்தக திருவிழா கண்காட்சி லட்சினை வெளியிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 11, 2026

அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகம், பல்நோக்கு கூட்டரங்கில், என் ஊர் என் கனவு திட்டம்” கலந்துரையாடல் கூட்டம் இன்று (பிப்.10) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்று அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கைகளை பெற்றார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News February 10, 2026

திருவள்ளூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

திருவள்ளூரில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

image

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

News February 10, 2026

பூந்தமல்லி மெட்ரோ சேவைக்கு இறுதி ஆய்வு!

image

பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு நாளை (பிப்.11) இறுதி ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரை நிறுத்தங்களையும் மெட்ரோ ரயிலை இயக்க இறுதி ஆய்வை மேற்கொள்ளும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம், பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாள தரம், ரயில் பெட்டிகளின் வசதி குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது.

News February 10, 2026

திருவள்ளூரில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

திருவள்ளூர்: மின்சாரம் தாக்கி உடல் கருகி பலி!

image

திருப்பாலைவனம் அருகே பாக்கம் கிராமத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நில விற்பனைக்கு நேற்று (பிப்.09) வரவேற்பு கொடி அகற்றும் பணியில் காவல்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்துரு (24) ஈடுபட்டிருந்தார்.அப்போது, உயர் மின்அழுத்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!