India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமழிசை பேரூராட்சி தலைவர் உ.வடிவேல், கடந்த மே மாதம் சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடந்து, பேரூராட்சியின் துணைத் தலைவராக இருந்த மாகாதேவன் பொருப்பு தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். இந்நிலையில், காலியாக உள்ள தலைவர் பதவிக்கான மறைமுக இடைதேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணிவரை லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
திருவேற்காடு வணிகர்கள் சங்கங்களில் கூட்டமைப்பு மற்றும் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில், காமராஜரின் 112ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவேற்காட்டில் நேற்று (ஜூலை.28) நடைபெற்றது. இதில், தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, சா.மு.நாசர் எம்.எல்.ஏ, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டு 1,122 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. BSP கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், இதுவரை 20 பேர் கைதாகியுள்ளனர். இவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம், கொலைக்கு தரப்பட்ட பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (45). நேற்று மாலை இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு அண்ணா நகரில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு, இரவு வீட்டு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை குற்றங்களுக்கு காவல்துறை தான் பதில் சொல்ல வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லையில் காங்., நிர்வாகி கொலை செய்யப்பட்டது குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “கொலை குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது தான் முக்கியம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் கேள்வி கேட்கலாம்” என்றார்.
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா நேற்று அதிகாலை தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, சாமிக்கு விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்றிரவு மட்டும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு குடும்பத்தாரோடும் வழிபாடு செய்து வருகின்றனர். இதனால், கோயில் திருவிழாவாக காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகிலன், அப்பு, நூர் விஜய் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே, 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், மேலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா, நேற்று தொடங்கி வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை உடனடியாக மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, மலைக்கோயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் 15 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.