Thiruvallur

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருவள்ளூரில் உள்ள 6,25,864 அட்டை தாரர்களில் ஜூலை மாத பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் பண்ணுங்க.

News August 4, 2024

பிரபல ரவுடி சீஸிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்கு

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான சீசிங் ராஜாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவில் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் காரில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, வேளச்சேரியில் பார் நடத்தும் ஆனந்தனை மிரட்டி பணம் கேட்டதாக சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் நேற்று (ஆகஸ்ட் 3) மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

News August 3, 2024

திருவள்ளூரில் இரவு மழை பெய்யும்

image

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 3, 2024

இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 3, 4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து வருவதால் குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஷேர் பண்ணுங்க.

News August 3, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், திருவள்ளூர் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், விபத்துகள், கோரிக்கைகள், அரசியல் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். இதில், ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News August 3, 2024

திருவள்ளூரில் இன்று மின்தடை

image

திருவள்ளூரில் நாளை (ஆகஸ்ட் 2) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை திருவள்ளூர் நகரில் உள்ள ஜே.என்.சாலை, ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை, பூங்கா நகர், புங்கத்தூர், போளிவாக்கம், மணவாளநகர், ஏகாட்டூர், வெங்கத்தூர், கீழ்நல்லாத்தூர், மேல்நல்லாத்தூர், பெரியகுப்பம், நுங்கம்பாக்கம், ஒண்டிகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News August 3, 2024

சுற்றுலா தொழில்முனைவோா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சுற்றுலா தொழில்முனைவோா் விருதுக்கு திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் வரும் ஆக. 20க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், பயண பங்குதாரா், விமான பங்குதாரா், உணவகங்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா வழிகாட்டிகள், கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஏற்பாட்டாளா்கள் இணையதளத்தின் மூலமாகவும், மாவட்ட சுற்றுலா அலுவலரிடம் நேரிலும் விண்ணப்பிக்கலாம்.

News August 2, 2024

திருவள்ளூரில் இன்று இரவு 10 மணி வரை மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூரில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

திருவள்ளூரில் இன்று இரவு 7 மணி வரை மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூரில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

திருவள்ளூர் மக்களே ரயில்கள் ரத்து

image

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.40, 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் இன்று மற்றும் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரத்து செய்யப்படும். ஆவடியில் இருந்து பட்டாபிராமுக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகஸ்ட் 3 மற்றும் 5ஆம் தேதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!