Thiruvallur

News August 7, 2024

அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது நீக்கப்பட்டார். பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்., பொது செயலாளராக இருந்துள்ளார். இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அருள் உடன் தொடர்பில் இருந்துள்ளார். இதுகுறித்து, அவரிடம் போலீசார் கடந்த 3 நாட்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.

News August 7, 2024

பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் கைது

image

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், சிறையில் உள்ள பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியான அருள் உடன் அஸ்வத்தாமன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்கள் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஆவார்.

News August 7, 2024

திருவள்ளூர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

image

அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூரிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரும் 20, 28 ஆகிய தேதிகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான போட்டி காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, 2ஆம் பரிசு ரூ.3,000, 3ஆம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளன.

News August 7, 2024

திருவள்ளூரில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ., கும்மிடிப்பூண்டி, ஜாமீன் கொரட்டூர், பூந்தமல்லி அருகே 3 செ.மீ., திருவள்ளூரில் 2 செ.மீ., ஆவடி மற்றும் பூண்டியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. உங்க ஏரியாவில் மழை பெய்ததா?

News August 7, 2024

குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழப்பு

image

ஆவடி, நந்தவனம்மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் – பிரியா தம்பதிகளின் மகள் ரூபாவதி (5) நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது குளிர்சாதனப் பெட்டியில் இருந்து கசிந்த மின்சாரம், ரூபாவதி மீது தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். குழந்தையை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனை கொண்டு செல்ல, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 6, 2024

திருவள்ளூரில் ரூ.1.70 கோடி மோசடி செய்தவர் கைது

image

திருவள்ளூர் அருகே ஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (57). இவரிடம் சோழவரம், ஒரக்காடு கிராமத்தைச் சேர்ந்த விருப்பாச்சி (45) என்பவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை விநியோகம் செய்வதாக கூறி ரூ.1.70 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு, மேற்கண்ட பொருட்களை விநியோகம் செய்யாமல் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விருப்பாச்சியை நேற்று (ஆக.5) கைது செய்தனர்.

News August 6, 2024

ரேஷன் கார்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

image

தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் பெரும் ஒரு சிலருக்கு குடும்ப உறுப்பினர் பெயர்கள் பிளாக் செய்திருப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய முழு ரேஷன் பொருட்கள் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பபட்டது. இந்தப் பிரச்சினையை ஆணையரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News August 6, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், வள்ளியம்மாபுரம் A V S கல்யாண மண்டபத்தில் நாளை மறுநாள், 8 ஆம் தேதியும், மேல் திருத்தணி ராஜுலு கல்யாண மண்டபத்தில் 9 ஆம் தேதியும், மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது. அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வாழும் மக்கள் தாங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

News August 6, 2024

பிரிட்ஜில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

image

ஆவடி, நந்தவனம்மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் – பிரியா தம்பதிகளின் மகள் ரூபாவதி(5) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது குளிர்சாதனப் பெட்டியில் இருந்து கசிந்த மின்சாரம் ரூபாவதி மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனே குழந்தையை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ரூபாவதி இறந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 6, 2024

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், திருவேற்காடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

error: Content is protected !!