India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு 1 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
நடப்பு சொர்ண வாரிப் பருவத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது. விவசாயிகளிடம் கூடுதலாக கட்டணத்தை வசூலிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரித்தார். மேலும், 9344839708, 044 -27662228 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டறை பெரும்புதூரில், நேற்று தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், பயன் பெற்ற 1,000 மாணவர்களுக்கு அமைச்சர் ஆர். காந்தி மஞ்சப் பைகளை வழங்கினார். மாநிலம் முழுவதும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் ‘மீண்டும் வஞ்சப்பை’ பிரச்சாரத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் பிரபு சங்கர் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பொதுமக்களின் குறைகளை கேட்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
திருத்தணி அடுத்த ராமஞ்சேரி பகுதியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் நேற்று உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 மாணவர்கள் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். இறந்தவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக, மீஞ்சூர், திருமழிசை, பூந்தமல்லி, திருநின்றவூர், பொன்னேரி, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு, இன்று மாலை காரில் 7 பேர் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ராமஞ்சேரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே, மாவட்ட எஸ்.பி. மற்றும் கலெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ராமஞ்சேரி பகுதியில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 8 பேர் காரில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுங்கள்.
ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்த கோபிநாத் என்பவர் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஷ வாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஒருவரும், கடந்த ஆண்டு ஒருவரும் ஆவடி மாநகராட்சியில் விஷ வாயு தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.