Thiruvallur

News August 14, 2024

சோழவரத்தில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு

image

சோழவரத்தில் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. பொன்னேரி அடுத்த சோழவரம் ஒரக்காட்டில் 14.5 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் தனியார் சோப்பு நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.150 கோடி ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 14, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,479 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 93 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,450 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 110 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 310 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.14) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 14, 2024

அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை 2/2

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை துப்பாக்கியை காட்டி மிரட்டியது உண்மையா? கொலையாளிகளை ஒருங்கிணைத்தது எப்படி? அவர்களுக்கு பணம் எப்படி விநியோகிக்கப்பட்டது? கொலையாளிகளை சிறையின் சந்தித்து நாகேந்திரன் கொலை திட்டம் தீட்டினாரா? கொலையில் அரசியல் பின்புலம் உள்ளதா? என கேள்வி கேட்டு போலீசார் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

News August 14, 2024

அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை 1/2

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் உடன் மோதல், எத்தனை ஆண்டுகளாக ஆம்ஸ்ட்ராங் உடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது? நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மையா? எத்தனை முறை ஆம்ஸ்ட்ராங் உடன் இடம் தொடர்பான பஞ்சாயத்து நடந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News August 14, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஆக.14) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஆவடி, திருமுல்லைவாயல், பாரதி நகர், வேணுகோபால் நகர், வ.உ.சி நகர், கணேஷ் நகர், நேதாஜி நகர், சோழம்பேடு, வைஷ்ணவி நகர், சோழவரம், சோத்துபெரும்பேடு, அல்லிமேடு, மேட்டுசுரம்பேடு, மேட்டு காலனி, ஒரக்காடு, கம்மவார்பாளையம், குமரன் நகர், நல்லூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

News August 13, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் இன்று கூறியிருப்பதாவது, வருகின்ற 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறைக் கடைகள், அதைச் சேர்ந்த பார்கள், ஓட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால் அவைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News August 13, 2024

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் இன்று (ஆக.13) கூறியதாவது, தமிழ்நாடு சீர்மரபினர் வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினருக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, கல்வி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே உறுப்பினர்கள், தங்களது உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

News August 13, 2024

திருவள்ளூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு

image

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில், வரும் 16ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். SHARE NOW

News August 13, 2024

காவல் துணை கண்காணிப்பாளர் மாரடைப்பால் மரணம்

image

அம்பத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சரவணன், நேற்றிரவு மூச்சுத் திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். திருமுல்லைவாயல் அடுத்த நாகம்மை நகரில் உள்ள தனது வீட்டில், நேற்றிரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டதில், அவர் மாரடைப்பில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News August 13, 2024

அஸ்வத்தாமன், நாகேந்திரனை காவலில் எடுக்க முடிவு

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியது எப்படி? யாருக்கெல்லாம் இதில் தொடர்பு என போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மேலும், அவரது தந்தையும் பிரபல ரவுடியுமான நாகேந்திரனையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!