Thiruvallur

News August 16, 2024

நகைக்கடை உரிமையாளரை வெட்டி 50 சவரன்கொள்ளை

image

ஆவடி அருகே திருமுல்லைவாயல், செந்தில் நகரில் நகைக்கடை நடத்தி வருபவர் ரமேஷ்குமார் (40). நேற்று (ஆக.15) இரவு இவரது கடைக்குள் புகுந்த இருவர் ரமேஷ்குமாரை வெட்டி 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். சிகிச்சை பெற்று இன்று (ஆக.16) வீடு திரும்பிய ரமேஷ்குமார் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சமபவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 16, 2024

ஆவடி ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு

image

ஆவடி ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் Graduate & Technician Apprentice காலிப்பணியிடங்களுக்கு <>இணையதளம் <<>>மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 82 காலிபணியிடங்களுக்கு B.Com, B.Sc, BBA, BCA, BE/B.Tech, Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் 31.08.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News August 16, 2024

பட்டாபிராமில் இரண்டு நாட்கள் இலவச புத்தக கண்காட்சி!

image

பட்டாபிராம் வசந்தம் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் ஞாயிறு இரவு 8 மணி வரை இரண்டு நாட்கள் இலவச புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் அரங்கம், கல்வி அரங்கம், மூடநம்பிக்கை, அறிவியல் அரங்கம், வினாடி வினா அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பட்டாபிராம் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

News August 16, 2024

திருவள்ளூரில் மகளிர் உரிமைத் தொகை குறித்து வதந்தி

image

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெற வருகின்ற ஆகஸ்ட் 17, 19, 20-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி பரவி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் கேட்டபோது அது தவறான தகவல் என்றும் இதுபோன்ற வதந்தியான செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார். இந்த வதந்தியை உங்களுக்கு தெரிந்தவர்கள் நம்பியிருந்தால் அவர்களுக்கு இதனை ஷேர் செய்து உதவவும்.

News August 16, 2024

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய பிரபல ரவுடி கைது

image

திருவள்ளூர் அடுத்த சோழவரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆந்திராவில் பதுங்கி இருந்த டியோ கார்த்திக், விக்கி, சுரேஷ், உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

News August 16, 2024

திருவள்ளூரில் இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள்

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காக்களூர் துணைமின் நிலையத்தில் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரையும், திருத்தணி துணை மின்நிலைத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும், கடம்பத்துார் துணை மின் நிலையத்தில் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும் மின் தடை செய்யப்படுகிறது.

News August 16, 2024

திருத்தணி: ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

image

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன் பாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் விதிகளை மீறி இயக்கப்பட்ட வெளி மாநில மற்றும் உள் மாநில வாகனங்கள் மீது 1221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ன. மேலும் விதிகளை மீறிய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.68 லட்சம் அபராதம் வசூலித்து 116 சதவீதம் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.

News August 16, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,477 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 91 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,430 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 110 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 309 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.16) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 16, 2024

திருவள்ளூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு

image

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில், இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். SHARE NOW

News August 16, 2024

திருவேற்காட்டில் அகற்றவுள்ள வீடுகளை ஆய்வு செய்த எம்பி

image

திருவேற்காடு கூவம் ஆற்றை ஒட்டியுள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று சசிகாந்த் செந்தில் எம்பி அப்பகுதிக்கு சென்று வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் வீடுகளை அகற்ற கூடாது என கண்ணீர் மல்க கூறினர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக எம்.பி. தெரிவித்தாா்.

error: Content is protected !!